உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
8 செவ்வாய்

தற்போதைய அரசாங்கத்தின் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்கும் கொள்கை பலவீனம்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
104 பார்வைகள்

தற்போதைய அரசாங்கத்தின் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்கும் கொள்கை பலவீனமாக காணப்படுகின்றன. இஸ்ரேலுக்கான வேலைவாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகளும் செயல்திறனற்ற விதத்தில் அமைந்து காணப்படுகின்றன. இதற்கு முன்னரும் நிர்மாணத் துறையைச் சேர்ந்த 3500 பேருக்காக நான் குரல்கொடுத்தேன். ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் உட்கட்டமைப்புத் துறைக்கு எந்தவொரு வேலைவாய்ப்பும் பெற்றுக் கொடுக்கப்படவில்லை. வேலைகளுக்கு செல்ல எதிர்பார்த்திருப்போர் பொலிஸ் அறிக்கைகள் மற்றும் தகுதிப் பரிசோதனைகளை பெற்ற போதிலும் அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் இன்னும் பெற்றுக் கொடுக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பத்தரமுல்லை, பொல்துவ சந்தியில் இன்று (08) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த இஸ்ரேலிய உட்கட்டமைப்புத் துறை லொட்டரி எதிர்பார்ப்பு ஐக்கிய அமைப்பினரை சந்தித்து கலந்துரையாடிய வேளையிலயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

560 பேர் இந்த வேலைவாய்ப்பை எதிபார்த்துக் காத்திருக்கின்றனர். மேலும் 1200 பேர் உட்கட்டமைப்பு லொட்டரி முறையில் (Infrastructure Lottery System) காத்திருக்கின்றனர். இந்த உட்கட்டமைப்புப் பிரிவினர் மற்றும் நிர்மாணத்துறையைச் சேர்ந்தவர்கள் முகங்கொடுக்கும் பிரதான பொதுவான பிரச்சினை அரசாங்கத்தினூடாக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் மந்தகதியில் இடம்பெற்று வரும் அதேவேளை, தனியார் துறையின் வேலைத்திட்டம் துரிதமாக நடக்கின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் ஊடாக இந்த வேலைவாய்ப்புகளுக்காகச் செல்லும்போது 10 இலட்சம் போன்ற குறைந்த தொகையே செலவாகின்றன. ஆனால் தனியார் ஊடாகச் செல்வதாயின் 35 இலட்சம் செலுத்தவேண்டி ஏற்படுகின்றன. இந்த வேலைத்திட்டத்தில் சுரண்டல்களும் சூறையாடல்களும் இடம்பெறுகின்றன. இந்த அநீதிக்கு எதிராக நான் முன்நிற்பேன். சபா பீடத்துக்குள்ளும் சென்று இந்த இப்பிரச்சினைகளை முன்வைப்பேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என வாக்குறுதியளித்த தற்போதைய அரசாங்கம், இந்தச் சுரண்டல் முறையை ஒழித்து, 10 இலட்சத்திற்கு இஸ்ரேல் செல்லும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறும், பொய் கூறும் அரசியலை நிறுத்துமாறும் இந்த அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த பலவீனங்களைத் திருத்திக் கொள்ளுமாறு அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கின்றேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

இந்த அமைதி வழியிலான ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அநீதிக்கு உள்ளாகியுள்ள இந்த வேலைவாய்ப்புகளை எதிர்பார்தது காத்திருப்போரைச் சந்தித்து அவர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடி விபரங்களைக் கேட்டறிந்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மஸ்கெலியா பிரதேச சபையின் உறுப்பினராக நலிந்த பிரதீப் பதவியேற்றார்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தின் கீழ், மஸ்கெலியா பிரதேச சபையின் கௌரவ உறுப்பினராகத் திரு. நலிந்த பிரதீப் அவர்கள் இன்று மஸ்கெலியா பிரதேச சபை காரியாலயத்தில் உத்தியோகபூர்வமாக…

1 0 0
இலங்கை செய்திகள்

ஆசிரியர் சேவைக்கு தகுதி பெறுபவர்களுக்கான நேர்முகத் தேர்வு தொடர்பான கலந்துரையாடல்.!

பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்வதற்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ள நிலையில், அமைச்சரவைத் தீர்மானத்துக்கு அமைவாக அடுத்தகட்டமாக முன்னெடுக்க வேண்டிய நேர்முகத் தேர்வுகளைத் நடத்துவதற்கான…

101 0 0
இலங்கை செய்திகள்

பல கோடி ரூபாய் பெறுமதியான போ*தைப்பொருட்கள் கடத்தல்.!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 5 கோடியே 13 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களை சட்டவிரோதமாக இலங்கைக்குள் கடத்த முயன்ற தாய்லாந்து நாட்டைச்…

84 0 0
இலங்கை செய்திகள்

மீண்டும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் குரல் எழுப்பும் முக்கிய அரசியல் பிரதிநிதி.!

18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) உரையாற்றியுள்ளதாக இலங்கையின் முக்கிய அரசியல் தரப்பொன்று தெரிவித்துள்ளது. கடந்த 2008…

102 0 0