உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

புத்தள – கதிர்காமம் வீதியில் காட்டு யானை தாக்குதல் : 10 பேர் காயம்!

இலங்கை செய்திகள் 4 நாட்கள் முன்
66 பார்வைகள்

புத்தள – கதிர்காமம் வீதியில் பயணித்த சொகுசுப் பேருந்து ஒன்று காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று பிற்பகல், சிலாபத்திலிருந்து கதிர்காமம் நோக்கி வந்த வழிபாட்டாளர்கள், கதிர்காம வழிபாட்டை முடித்துக்கொண்டு புத்தள – கதிர்காமம் வீதியூடாக மீண்டும் திரும்பிக்கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ND 9105 என்ற பதிவெண்ணைக் கொண்ட குறித்த பேருந்தில் விபத்து நடந்த வேளையில் சுமார் 60 பயணிகள் வரை பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வீதியில் நின்றிருந்த காட்டு யானை திடீரென பேருந்தைத் தாக்கியதில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீதியை விட்டு விலகி தலைகீழாகக் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் காயமடைந்த சுமார் 10 பயணிகள் உடனடி சிகிச்சைக்காக கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக காயமடைந்த எவரின் நிலையும் பலத்த காயங்களுடன் ஆபத்தான கட்டத்தில் இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதையல் தோண்டிய ஐவர் கைது.!

ஹிங்குராக்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்பொத்த பகுதியில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய,…

120 0 0
இலங்கை செய்திகள்

இந்தியாவில் இருந்து கடல் வழியாக வருகை தந்த 11 பேரும் பிணையில் விடுவிப்பு.!

இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்டவேளை மணல் தீவுகளில் மீட்கப்பட்ட 11 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் தமது ரோந்து நடவடிக்கையில்…

99 0 0
இலங்கை செய்திகள்

20 இற்குத் தேவையான சர்வஜன வாக்கெடுப்பு 22 இற்கு ஏன் அவசியம் இல்லாமல் போனது?

அன்று 20ஆவது திருத்தத்தின்போது சர்வஜன வாக்கெடுப்பைக் கோரியவர்கள், இன்று 22ஆவது திருத்தத்துக்கு அதனைத் தவிர்ப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய…

107 0 0
இலங்கை செய்திகள்

தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும்.!

சிவப்பு ஜுண்டாக்களுக்கு அஞ்சித் தாம் ஒருபோதும் இரண்டுக்கு மூன்றாக வளைந்துகொடுக்கப் போவதில்லை எனவும், வன்முறை வழிகளில் அல்லாமல் ஜனநாயக ரீதியிலான தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும் எனவும்…

119 0 0