உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
3 வியாழன்

நேபாள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இ.தொ.கா. தலைவர் ஆழ்ந்த இரங்கல்.!

இலங்கை செய்திகள் 49 நிமிடங்கள் முன்
32 பார்வைகள்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான், இலங்கையில் உள்ள நேபாள தூதரகத்துக்கு நேற்று நேரில் சென்று, நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து, இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

நேபாள பிரதமர் பாலேந்திர ஷாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இறைவனைப் பிரார்த்திப்பதாகவும், இந்த இக்கட்டான சூழ்நிலையில் நேபாள மக்களுடன் தனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் இணைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேபாளம் எதிர்கொண்டுள்ள இந்தக் கடினமான சூழ்நிலையை விரைவில் கடந்து, பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டுமொருமுறை இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும் என்றும் அவர் தனது வாழ்த்துக்களையும் பிரார்த்தனைகளையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட சட்ட ஆலோசகர் மாரிமுத்து, மேல்மாகாண உப தலைவர் திருக்கேஸ் செல்லசாமி மற்றும் தொழிற்சங்க உப தலைவர் ராஜமணி ஆகியோர் உடனிருந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இலங்கையின் கடன் சுமை அதிகரித்துள்ளது என்ற தகவல்கள் முற்றிலும் தவறானவை.!

இலங்கையின் கடன் சுமை அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகளும் சில ஊடகங்களும் பரப்பி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை, ஆதாரமற்றவை மற்றும் மக்களைத் தவறாக வழிநடத்துபவை எனத் தொழிலாளர் அமைச்சரும்,…

62 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் மீலாதுன் நபி விழா.!

கொழும்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் மீலாதுன் நபி விழா மாநகர சபை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ்வாண்டு விழாவின் முக்கிய அம்சமாக, மாநகர சபை வரலாற்றில் முதன்முறையாக…

47 0 0
இலங்கை செய்திகள்

அனுராதபுரத்தில் எதிர்ப்புப் பேரணி நிச்சயம் நடக்கும்.!

அனுராதபுரத்தில் எதிர்வரும் செப்டெம்பர் 12ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்புப் பேரணியைத் தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என்றும், எனினும்…

57 0 0
இலங்கை செய்திகள்

முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கம் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்.!

மூத்த தமிழ்த் தேசியவாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கொழும்பு தனியார் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த ஜூன்…

64 0 0