உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
3 வியாழன்

அனுராதபுரத்தில் எதிர்ப்புப் பேரணி நிச்சயம் நடக்கும்.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
57 பார்வைகள்

அனுராதபுரத்தில் எதிர்வரும் செப்டெம்பர் 12ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்புப் பேரணியைத் தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என்றும், எனினும் அனுராதபுரத்தின் ஏதேனும் ஓர் இடத்தில் இந்தப் போராட்டத்தை நடத்துவதை எவராலும் தடுக்க முடியாது என்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள விவசாயிகள், தொழிலாளர்களின் குரலாகவே இந்தப் போராட்டம் அனுராதபுரத்தில் ஒருங்கிணைக்கப்படுகின்றது.

அனுராதபுர மாவட்ட விவசாயிகளுக்குத் தேவையான உரம் கிடைக்கவில்லை. வறட்சியான காலநிலையால் மக்கள் சொல்லொணாத் துயரங்களை எதிர்நோக்குகின்றனர். அரசின் மீதான மக்களின் எதிர்ப்பைக் காட்டுவதற்காக ‘சல் காது’ அரங்கைக் கோரிய போதிலும், அரசு சட்டதிட்டங்களைச் சுட்டிக்காட்டி மைதானத்தை வழங்க மறுத்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் நாமல் ராஜபக்ஷவின் அரசியல் வளர்ச்சி குறித்து அரசுக்குச் பேரச்சம் ஏற்பட்டுள்ளது. இதனாலேயே எங்களைத் தினமும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைத்து அடக்குமுறைகளைப் பிரயோகிக்க முயல்கின்றனர். அரங்கம் மறுக்கப்பட்டாலும் அனுராதபுரத்தின் ஏதேனும் ஓர் இடத்தில் போராட்டம் நிச்சயமாக நடைபெறும்.” – என்றார்.

22ஆவது அரசமைப்புத் திருத்தம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணைகள் நீதிமன்றில் இடம்பெற்றுவரும் நிலையில், இது நீதித்துறையின் சுயாதீனத்துக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் எனச் சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளதை அவர் ஆமோதித்தார்.

நீதிபதிகளின் சேவைக் காலத்தை நீடிப்பது குறித்து மக்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றாலும், நாட்டில் ஆயிரம் பிரச்சினைகள் நிலவும் போது குறுக்கு வழியில் அரசு தனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முயல்வதையே மக்கள் எதிர்க்கின்றார்கள் என்று குறிப்பிட்ட அவர், நாட்டின் உயர்ந்த நீதித்துறைக்கும் நீதிபதிகளுக்கும் களங்கம் விளைவிக்கும் செயற்பாடுகளை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இலங்கையின் கடன் சுமை அதிகரித்துள்ளது என்ற தகவல்கள் முற்றிலும் தவறானவை.!

இலங்கையின் கடன் சுமை அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகளும் சில ஊடகங்களும் பரப்பி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை, ஆதாரமற்றவை மற்றும் மக்களைத் தவறாக வழிநடத்துபவை எனத் தொழிலாளர் அமைச்சரும்,…

62 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் மீலாதுன் நபி விழா.!

கொழும்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் மீலாதுன் நபி விழா மாநகர சபை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ்வாண்டு விழாவின் முக்கிய அம்சமாக, மாநகர சபை வரலாற்றில் முதன்முறையாக…

47 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இ.தொ.கா. தலைவர் ஆழ்ந்த இரங்கல்.!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான், இலங்கையில் உள்ள நேபாள தூதரகத்துக்கு நேற்று நேரில் சென்று, நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தனது ஆழ்ந்த…

31 0 0
இலங்கை செய்திகள்

முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கம் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்.!

மூத்த தமிழ்த் தேசியவாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கொழும்பு தனியார் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த ஜூன்…

64 0 0