உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

திருமண மண்டபம் ஒன்றின் மீது அமெரிக்கா தாக்குதல்; குழந்தை உட்பட 05 பேர் உயிரிழப்பு.!

உலக செய்திகள் 2 வாரங்கள் முன்
77 பார்வைகள்

ஹோர்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள தெற்கு ஈரானின் சீரிக் பகுதியிலுள்ள பண்டார் கூஹெஸ்டாக் என்ற இடத்தில் நடைபெற்ற திருமண மண்டபம் ஒன்றின் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் 04 வயதுக் குழந்தை உட்பட 05 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக ஈரானிய செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலை ஈரானிய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்தியாவிலுள்ள ஈரானியத் தூதரகம் ஆகியவை கடுமையாகக் கண்டித்துள்ளது

அத்துடன், இதனை “அமெரிக்கப் பயங்கரவாத இராணுவத்தின் கொடூரக் குற்றம்” எனச் சாடியுள்ளன.

செவ்வாய்க்கிழமை அன்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரக் காவல் படையின் இராணுவ இலக்குகள் மீது அமெரிக்கப் படைகள் தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

ஈரானிய வான் பாதுகாப்பு தளங்கள், ரேடார் அமைப்புகள், கடற்படை உள்கட்டமைப்புகள், கண்ணிவெடி வைக்கும் வசதிகள் மற்றும் தொலைத்தொடர்பு மையங்கள் மீது இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் இத்தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரானின் புரட்சிகர காவல் படைகள் ஜோர்தான், ஈராக் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களை இலக்கு வைத்து பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜோர்தானிய வான்வெளியில் நுழைந்த 13 பாலிஸ்டிக் ஏவுகணைகளில் 10 ஏவுகணைகளைத் தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தியதாக ஜோர்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.

பஹ்ரைனில் ஈரானிய ட்ரோன்கள் அழிக்கப்பட்ட நிலையில், வடக்கு ஈராக்கின் அர்பிலில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் புரட்சிகர காவல் படைகள் அறிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதத்திற்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே நடந்துள்ள மிக மோசமான நேரடி இராணுவ மோதல் இதுவாகும்.

இதனால் மேற்காசியாவில் போர்ச் சூழல் மேலும் தீவிரமடைந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சவூதியின் குழாய் வழித்தடம் மூடல்: சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்வு!

ஹார்முஸ் நீரிணையைத் தவிர்த்துச் செல்லும் தனது முக்கியமான குழாய் வழித்தடத்தை சவுதி அரேபியா மூடியதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமையன்று (13) மசகு எண்ணெய் விலைகள் உயர்ந்தன. கிழக்கு நேரப்படி…

1 0 0
உலக செய்திகள்

சவூதி எண்ணெய் உட்கட்டமைப்பு மீது ஆளில்லா வானூர்தி தாக்குதல்!!

சவூதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் குழாய் உட்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி தாக்குதலில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ செயற்கைக்கோள் நிழற்படங்களை அடிப்படையாகக் கொண்ட தகவல்கள்…

14 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவில் தட்டம்மை நோயால் பெண் உயி@ரிழப்பு!

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் தட்டம்மை (Measles) நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு 40 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய இந்த அரிதான நோய்த்தொற்றால் நடப்பு ஆண்டில்…

43 0 0
உலக செய்திகள்

இரகசிய நீதிமன்ற உத்தரவால் அமெரிக்காவிலிருந்து ஆப்கான் பெண் நாடுகடத்தல்!

அமெரிக்காவில் சட்டப்பூர்வ நிரந்தர வசிப்பிட உரிமையைக் கொண்டிருந்த 47 வயதுடைய ஆப்கானிஸ்தானிய பெண் ஒருவரை, அந்த நாட்டின் இரகசிய நீதிமன்ற நடவடிக்கைகளின் மூலம் நாடுகடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்…

50 0 0