உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
2 புதன்

ஆடு திருடியவர் சிக்கினார்.!

இலங்கை செய்திகள் 27 நிமிடங்கள் முன்
44 பார்வைகள்

மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியில் வீதியோரத்தில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த ஆட்டை பிடித்து சிறிய ரக வானில் ஏற்றிச் சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 18ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் ஆட்டின் உரிமையாளர் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதையடுத்து, பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் சிசிரிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை முன்னெடுத்து, ஆட்டை கடத்திச் சென்ற வாகனத்தை அடையாளம் கண்டனர்.

இதன் அடிப்படையில் காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் நேற்று (01) கைது செய்யப்பட்டதுடன், ஆட்டை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட சிறிய ரக வேனும் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீண்டகாலமாக வாகனங்களில் ஆடு, மாடுகளை கடத்தி வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்து; ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி.!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதி, விளாவோடை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் ஒருவர் காயமடைந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

50 0 0
இலங்கை செய்திகள்

இரணைமடுக்குளம் மற்றும் கல்மடுக் குளத்தில் விடப்பட்ட மீன் குஞ்சுகள்.!

கிளிநொச்சி இரணைமடுக்குளம் மற்றும் கல்மடுக்குளம் ஆகியவற்றில் இன்று 58ஆயிரத்து 315இற்கும் மேற்பட்ட மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளது. டித்வா புயலால் பாதிக்கப்பட்ட நன்னீர் மீன்பிடி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்…

69 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தொகை போ*தைப்பொருளுடன் ஒருவர் கைது.!

வெல்லம்பிட்டி – சேதவத்தை பகுதியில் பெருந்தொகை போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று (2) கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே, சந்தேகநபர் கைது…

70 0 0
இலங்கை செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சை; 56,000 பேர் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தி.!

2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய 289 867 பரீட்சாத்திகளில் 56000 பேர் வெட்டுப்புள்ளிகளை விட அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.…

54 0 0