உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
12 சனி

சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி14 வயது சிறுவன் உயிரிழப்பு!

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
103 பார்வைகள்

பொலன்னறுவை, சிரிபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லேகம பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி 14 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பல்லேகம பகுதியைச் சேர்ந்த சிறுவன், நேற்று செவ்வாய்க்கிழமை இரவு காட்டு யானைகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலிக்கு அருகில் சென்றபோது மின்சாரம் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மின்சாரம் தாக்கிய நிலையில் தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஆரம்பகட்ட விசாரணைகளில், காணியைச் சுற்றி கம்பி வேலி அமைத்த நபர், தனது வீட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் அதற்கு மின்சாரம் வழங்கியிருந்தமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சட்டவிரோத மின்சார வேலியை அமைத்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிரிபுர பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஜனாதிபதியால் நீதிமன்றத்துக்கு மறைமுக அழுத்தம் : ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு!

அரசமைப்பு திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் வெளிவராத நிலையில், அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவோம் எனக் கூறி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நீதிமன்றத்துக்கு மறைமுக அழுத்தம் கொடுத்து…

97 0 0
இலங்கை செய்திகள்

எந்தக் கட்சியாலும் அரசைக் கவிழ்க்கவே முடியாது! : அமைச்சர் பிமல் ரத்நாயக்க திட்டவட்டம்!!

Photo – எந்தக் கட்சியாலும் அரசைக் கவிழ்க்கவே முடியாது!மொட்டுத் தரப்பினரின் போராட்டம் பயனளிக்காது!! தற்போதைய அரசியல் சூழலில் எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த ஸ்திரமான அரசைக் கவிழ்க்கவோ…

86 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தல் விசேட செயற்குழுவின் காலம் நீடிப்பு! : எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் எதிர்ப்பு!!

காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தலாம் என்பதை ஆராய்ந்து யோசனை மற்றும் பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட செயற்குழுவின்…

110 0 0
இலங்கை செய்திகள்

வடமாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் உலக சுற்றுலா தின விழா

வடமாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் எதிர்வரும்  25ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை இடம் பெற உள்ள  உலக சுற்றுலா தின விழா…

91 0 0