உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
12 சனி

நெடுங்கேணியில் சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பில் கலந்துரையாடல்

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
106 பார்வைகள்

மகாவலி அதிகாரசபையினால் முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயா நீர்ப்பாசனக் கட்டுமானத் திட்டத்தினால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் மற்றும் மக்கள் பாதிப்புகள் தொடர்பில் நெடுங்கேணியில் தெளிவூட்டல் மற்றும் கூட்டுக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

நேற்று (01) வவுனியா வடக்கு, நெடுங்கேணி பிரதேசசபை கேட்போர் கூடத்தில், நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் “இயற்கையை பாதுகாப்பது எமது உரிமை” என்ற தொனிப்பொருளில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

இதன்போது, திட்டத்தினால் இயற்கை வளங்கள், வனஜீவராசிகள் மற்றும் வவுனியா வடக்கு பிரதேச மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வவுனியா பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ். விஜயமோகன், பிரதேசசபை உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், சூழலியல் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஜனாதிபதியால் நீதிமன்றத்துக்கு மறைமுக அழுத்தம் : ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு!

அரசமைப்பு திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் வெளிவராத நிலையில், அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவோம் எனக் கூறி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நீதிமன்றத்துக்கு மறைமுக அழுத்தம் கொடுத்து…

97 0 0
இலங்கை செய்திகள்

எந்தக் கட்சியாலும் அரசைக் கவிழ்க்கவே முடியாது! : அமைச்சர் பிமல் ரத்நாயக்க திட்டவட்டம்!!

Photo – எந்தக் கட்சியாலும் அரசைக் கவிழ்க்கவே முடியாது!மொட்டுத் தரப்பினரின் போராட்டம் பயனளிக்காது!! தற்போதைய அரசியல் சூழலில் எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த ஸ்திரமான அரசைக் கவிழ்க்கவோ…

85 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தல் விசேட செயற்குழுவின் காலம் நீடிப்பு! : எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் எதிர்ப்பு!!

காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தலாம் என்பதை ஆராய்ந்து யோசனை மற்றும் பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட செயற்குழுவின்…

109 0 0
இலங்கை செய்திகள்

வடமாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் உலக சுற்றுலா தின விழா

வடமாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் எதிர்வரும்  25ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை இடம் பெற உள்ள  உலக சுற்றுலா தின விழா…

91 0 0