உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

வடமராட்சி வடக்கில் புதிய இரண்டு வீடுகள் கையளிப்பு.!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
117 பார்வைகள்

வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தினால் சமுர்த்தி வீட்டு திட்டத்தின் கீழ் வீடமைப்பு வசதியற்ற குடும்பங்களுக்கு பாதுகாப்பானதும், தரமானதுமான வாழ்விட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு ஒன்று பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த வீடு கையளிக்கும் நிகழ்வு வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் நடராசா திரலிங்கநாதன் தலைமையில இடம்பெற்றது. இதில் வடமராட்சி பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் அவர்களினால் பயனாளியான ஸ்ரீகரன் சதீஸ்வரன் அவர்களுக்கு குறித்த வீடு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி உத்தியோகத்தர், கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் சிதம்பரநாதன் அருள்ரூபன், தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி அமைப்பாளர் கணேசரூபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இங்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, புதிய வீடு கையளிக்கப்பட்டதன் மூலம் குறித்த குடும்பத்தின் நீண்டகால வீட்டு தேவைக்கு தீர்வு கிடைத்துள்ளதுடன், அவர்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கும் இது முக்கியமான ஆதரவாக அமையும் எனவும், மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இவ்வாறான அபிவிருத்தி திட்டங்கள் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் பிரிவு உட்பட்ட J/412 கிராம சேவையாளர் பிரிவிலும் நேற்று சமுர்த்தி வீட்டு திட்டத்தின் கீழ் புதிய வீடு ஒன்று கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்விலும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான “ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன்” அவர்களினால் மகேந்திரராஜா மகேஸ்வரி எனும் பயனாளியிடம் குறித்த வீடு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் தலைமையில இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி உத்தியோகத்தர், கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் சிதம்பரநாதன் அருள்ரூபன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி அமைப்பாளர் கணேசரூபன், பிரதீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வரவிருக்கும் பெரும்போக விவசாயத் திட்டங்கள் குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் அறிக்கை.!

நாட்டிலுள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் தற்போதைய நீர் கொள்ளளவு மற்றும் வரவிருக்கும் பெரும்போகச் செய்கைக்கான தயாரிப்புகள் குறித்து நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் மேலாண்மைப் பணிப்பாளர் பொறியாளர் எச். எம்.…

97 0 0
இலங்கை செய்திகள்

புதையல் தோண்டிய ஐவர் கைது.!

ஹிங்குராக்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்பொத்த பகுதியில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய,…

135 0 0
இலங்கை செய்திகள்

இந்தியாவில் இருந்து கடல் வழியாக வருகை தந்த 11 பேரும் பிணையில் விடுவிப்பு.!

இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்டவேளை மணல் தீவுகளில் மீட்கப்பட்ட 11 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் தமது ரோந்து நடவடிக்கையில்…

118 0 0
இலங்கை செய்திகள்

20 இற்குத் தேவையான சர்வஜன வாக்கெடுப்பு 22 இற்கு ஏன் அவசியம் இல்லாமல் போனது?

அன்று 20ஆவது திருத்தத்தின்போது சர்வஜன வாக்கெடுப்பைக் கோரியவர்கள், இன்று 22ஆவது திருத்தத்துக்கு அதனைத் தவிர்ப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய…

121 0 0