நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு.!
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேலணை, சாட்டி கடலில் நீராடச் சென்ற 52 வயதுடைய நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கொக்குவில் பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.