பள்ளத்தில் கவிழ்ந்த முச்சக்கரவண்டி; இருவர் உயிரிழப்பு.!
நல்லதண்ணியிலிருந்து மஸ்கெலியா நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியொன்று மோஹினி நீர்வீழ்ச்சியிலிருந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த முச்சக்கர வண்டியில் இரு முதியவர்களும் இரண்டு சிறுவர்களும் பயணித்துள்ளனர்.
பலத்த காயங்களுடன் இரு சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.