உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

பனைசார் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும்.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
79 பார்வைகள்

வருடாந்தம் வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டின் கீழ் ஜூலை 22 ஆம் திகதி தொடக்கம் 28 ஆம் திகதி வரையான காலப்பகுதியானது, பனை வளம் பெருகும் வகையிலும் பனை சார் உற்பத்தி பொருட்களின் பலாபலன்களை வெளிப்படுத்தும் வகையிலும் அப்பொருட்களுக்கு உறுதியான சந்தைப்படுத்தலை ஏற்படுத்தி கொடுக்கும் வகையிலும் பனம் விதைகள் நடுதல், பனை சார் உற்பத்தி பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும், பனைசார் பொருட்களை உற்பத்தி செய்தல் தொடர்பான போட்டிகள், பாடசாலை மாணவர்களிடையே ஓவியப் போட்டிகள், ‘தாலம்’ சஞ்சிகை வெளியீடு மற்றும் கலை நிகழ்வுகள் என்றவாறு வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள பனை தென்னை வள அபிவருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் ஒத்துழைப்புடன் பனை வாரமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் இவ்வருடம் ஜூலை 22 ஆம் திகதி தொடக்கம் ஜூலை 26 ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் நல்லூர், முத்திரைச்சந்தியில் அமைந்துள்ள சங்கிலியன் பூங்காவில் பனைசார் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் நிகழ்வானது “பனை வளம் நிலையான வாழ்வின் பலம்” எனும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ளது.

தொடர்ச்சியாக ஜூலை 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் மாவட்ட ரீதியாக கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலக ஏற்பாட்டில் பனை வளம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்குகளும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வயல் நிலங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரிப்பு.!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை கமநல சேவை நிலைய பிரிவில் பல பகுதிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் வயல் நிலங்களில் சட்டவிரோதமான முறையில் மணல்…

47 0 0
இலங்கை செய்திகள்

தலைக்கவசம் இன்றி சிறுவனை ஏற்றி பயணித்த உந்துருளி.!

இன்று (27) ஹட்டன் உடலென் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி வேகமாக பயணித்த உந்துருளியில் சுமார் எட்டு வயதுடைய சிறுவன் ஒருவன் தலைக்கவசம் இல்லாமல் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.…

45 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு.!

கெபிதிகொல்லாவ, கோனமரியாவ விகாரைக்கு அருகில் இன்று வியாழக்கிழமை (27) இடம்பெற்ற வீதி விபத்தில் பிறந்து 10 நாளேயான கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.…

52 0 0
இலங்கை செய்திகள்

மதுபான கடத்தல்காரரின் உதவியாளர்கள் சிக்கினர்.!

வாடகைக்குப் பெறப்பட்ட சொகுசு காரைப் பயன்படுத்தி வென்னப்புவவில் இருந்து கொண்டுவரப்பட்ட சட்டவிரோத மதுபானத் தொகையுடன் மதுபான கடத்தல்காரர் ஒருவரின் இரண்டு உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட…

54 0 0