உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

எங்கள் காணிகளை எங்களிடம் தாருங்கள் – வலிகாமம் வடக்கில் தொடரும் நில உரிமைப் போராட்டம்!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
91 பார்வைகள்

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதியில் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, அப்பகுதி மக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை ஐந்தாவது வாரமாகவும் கவனவீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த 36 ஆண்டுகளாகத் தங்களின் சொந்த நிலங்களை இழந்துள்ள மக்கள், பலாலி சந்தியில் ஒன்றுகூடி இந்தப் போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

பல தசாப்தங்களாகத் தமக்குச் சொந்தமான வீடுகள் மற்றும் காணிகளை இழந்த நிலையில், அகதிகளாகவும் வீடற்றவர்களாகவும் வாழ்ந்து வருகின்றனர் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தமது சொந்தக் காணிகளில், இராணுவத்தினர் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், வர்த்தக நிலையங்களையும் அமைத்துச் சுயதேவைகளுக்காகப் பயன்படுத்தி வருகின்றனர்.

சொந்த நிலங்களில் வேற்று நபர்கள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் கண்டு தாங்கள் மனவேதனை அடைகின்றனர் என்றும், மிக விரைவில் தங்களின் காணிகளையும் வீடுகளையும் மீட்டுத் தர வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமது நீண்டகாலப் போராட்டத்துக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 தொழிலாளர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று 27 ஆம் திகதி மாலை 3 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஆர்.…

22 0 0
இலங்கை செய்திகள்

விறகு வெட்டச் சென்ற மூவருக்கு நேர்ந்த துயரம்.!

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை தோட்டத்தில் உள்ள இரு மாணவர்கள் உட்பட மூவர் விறகு வெட்டச் சென்ற போது மின்சார தாக்குதலுக்கு இலக்கான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில்…

35 0 0
இலங்கை செய்திகள்

விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.!

திறப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் ஞானகுளம் பகுதியில் நேற்று புதன்கிழமை (26) வேன் மோதி 66 வயதுடைய சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக…

60 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் தேசிய உப்பு நிறுவனத்தின் புதிய நிர்வாகத் தொகுதி, களஞ்சியசாலை திறப்பு விழா.!

கனிம வளங்கள் நிறைந்த மன்னார் மாவட்டத்தில் கனிம எண்ணெய் மற்றும் எரிவாயு (கேஸ்) பரிசீலனைக்கு அரசு தற்போது நிதி ஒதுக்கீடு செய்து முன்னெடுப்புகளை செய்து வருகிறது. அவ்வாறான…

59 0 0