உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் மின்சார பிரச்சினைகள் குறித்து விசேட கலந்துரையாடல்

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
113 பார்வைகள்

மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் மின்சாரம் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (19) மதியம் மன்னார் மாவட்டச் செயலகத்தில் வலுசக்தி பிரதி அமைச்சர் முஹம்மது இல்யாஸ் முஹம்மது அர்கம் தலைமையில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த விசேட கலந் துரையாடலில்  இலங்கை மின்சார சபை அதிகாரிகள், காற்றாலை மின் நிறுவனங்களின் பிரதிநிதிகள், பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

குறித்த கலந்துரையாடலின் போது மன்னார் மாவட்டத்தின் மின்சார வசதிகள், வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பான பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக  கலந்துரையாடப்பட்டது.

  குஞ்சுக்குளம் பகுதியில்  வெள்ளத்தால் ஏற்படும் மின்சார அபாயங்களைத் தடுக்கும் வகையில் மின் இணைப்புகளை பாதுகாப்பான முறையில் உயர்த்தி அமைப்பது, சிலாவத்துறை, முருங்கன் மல்வத்து ஓயா பாலம் அருகில் உள்ள மின் கேபிள் களின் பாதுகாப்பை மேம்படுத்துதல், தள்ளாடி கடற்கரை வீதியில் வீதி விளக்குகளை அமைப்பது , மடு பிரதேச செயலகப் பிரிவின் சோதி நகர் பகுதியில் மின்சார வசதி அற்ற குடும்பங்களுக்கு இலவச கிராமப்புற மின் மயமாக்கல் திட்டத்தின் கீழ் மின்சார இணைப்புகளை வழங்குவது தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மன்னார் மாவட்டத்திற்கு உட்பட்ட  மறுசீரமைக்க தக்க எரிசக்தி திட்டங்கள்  தொடர்பாகவும்,   மன்னார் பிரதேச மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய  நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு திட்டங்கள் குறித்தும்  கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், மன்னார் தீவில் தொடர்ந்து ஏற்படும் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்துவது மற்றும் தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 தொழிலாளர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று 27 ஆம் திகதி மாலை 3 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஆர்.…

22 0 0
இலங்கை செய்திகள்

விறகு வெட்டச் சென்ற மூவருக்கு நேர்ந்த துயரம்.!

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை தோட்டத்தில் உள்ள இரு மாணவர்கள் உட்பட மூவர் விறகு வெட்டச் சென்ற போது மின்சார தாக்குதலுக்கு இலக்கான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில்…

35 0 0
இலங்கை செய்திகள்

விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.!

திறப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் ஞானகுளம் பகுதியில் நேற்று புதன்கிழமை (26) வேன் மோதி 66 வயதுடைய சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக…

60 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் தேசிய உப்பு நிறுவனத்தின் புதிய நிர்வாகத் தொகுதி, களஞ்சியசாலை திறப்பு விழா.!

கனிம வளங்கள் நிறைந்த மன்னார் மாவட்டத்தில் கனிம எண்ணெய் மற்றும் எரிவாயு (கேஸ்) பரிசீலனைக்கு அரசு தற்போது நிதி ஒதுக்கீடு செய்து முன்னெடுப்புகளை செய்து வருகிறது. அவ்வாறான…

59 0 0