உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

ஓய்வு பெற்றுச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
111 பார்வைகள்

இலங்கை பொலிஸ் சேவையில் நீண்ட காலம் இணைந்து கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்றுச் சென்ற 4 உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று கல்முனை  கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி  லசந்த களுவாராய்ச்சி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.அத்துடன் கல்முனை தலைமையக  பொலிஸ் நிலையத்தில் இருந்து சேவையின் பின்னர் ஓய்வு பெற்றுச் சென்ற 4 பேர் கௌரவிக்கப்பட்டனர்.

முதலில் ஒய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரும்  வரவேற்றகப்பட்டு நிகழ்வு இடம்பெறும் மண்டபத்திற்கு  அழைத்து வரப்பட்டனர்.

தொடர்ந்து கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி உரை மற்றும் ஓய்வு பெற்றுச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள்  உரைகள் இடம்பெற்றன.

பின்னர் சிற்றுண்டிகள் மதிய உணவுகள்  வழங்கப்பட்டு ஓய்வு பெற்றுச் சென்றவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.இக்கௌரவிக்கும் நிகழ்வில் நினைவுப்பரிசில்களுடன் புகைப்படம் பொறிக்கப்பட்ட கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இதன் போது சேவையின் பின்னர் ஓய்வு பெற்றுச் சென்றவர்களின் உறவினர்கள் நண்பர்கள்  கலந்து கொண்டதுடன் குறித்த நிகழ்வினை ஆரம்பம் முதல் இறுதி வரை  சமூக பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.எம் வாஹிட் சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

அத்துடன் நிகழ்வில் கல்முனை உவெஸ்லி உயர்தர மாணவிகளின் நாட்டிய நடனங்கள் இடம்பெற்றதுடன் பொலிஸ் உத்தியோகத்தர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றிருந்தன.இது தவிர இந்நிழ்வானது 2 ஆவது தடவையாகவும் கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி  லசந்த களுவாராய்ச்சி தலைமையில் நடைபெற்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

மேற்படி நிகழ்வுகள் யாவும் கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர்   பணிப்புரைக்கமைய   அம்பாறை மாவட்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர்  சுஜித் வேதமுல்லவின்  நெறிப்படுத்தலில்    அம்பாறை மாவட்ட  சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்  பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி ஆலோசனையில்  நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 தொழிலாளர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று 27 ஆம் திகதி மாலை 3 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஆர்.…

41 0 0
இலங்கை செய்திகள்

விறகு வெட்டச் சென்ற மூவருக்கு நேர்ந்த துயரம்.!

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை தோட்டத்தில் உள்ள இரு மாணவர்கள் உட்பட மூவர் விறகு வெட்டச் சென்ற போது மின்சார தாக்குதலுக்கு இலக்கான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில்…

35 0 0
இலங்கை செய்திகள்

விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.!

திறப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் ஞானகுளம் பகுதியில் நேற்று புதன்கிழமை (26) வேன் மோதி 66 வயதுடைய சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக…

60 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் தேசிய உப்பு நிறுவனத்தின் புதிய நிர்வாகத் தொகுதி, களஞ்சியசாலை திறப்பு விழா.!

கனிம வளங்கள் நிறைந்த மன்னார் மாவட்டத்தில் கனிம எண்ணெய் மற்றும் எரிவாயு (கேஸ்) பரிசீலனைக்கு அரசு தற்போது நிதி ஒதுக்கீடு செய்து முன்னெடுப்புகளை செய்து வருகிறது. அவ்வாறான…

59 0 0