பிள்ளைகளின் கண்முன்னே மனைவியை வெட்டிக் கொ#லை செய்த கணவன்!
காலி மாவட்டம், இக்கடுவை பிரதேசத்தில் நேற்று இரவு நான்கு பிள்ளைகளின் தாயான குடும்பப் பெண் ஒருவர் அவரது கணவனால் வெட்டிப் படுகொ#லை செய்யப்பட்டுள்ளார்.
இக்கடுவை பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
நேற்று இரவு மதுபோதையில் வீட்டுக்குத் திரும்பிய கணவனுக்கும், மனைவிக்கும் இடையில் இரவு உணவு தயாரிப்பது தொடர்பில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த கணவன், வீட்டில் இருந்த கூரிய ஆயுதத்தால் மனைவியைச் சரமாரியாக வெட்டியுள்ளார்.
பிள்ளைகளின் கண் முன்பாகவே இந்தக் கொடூர செயல் அரங்கேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
படுகாயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தகவலறிந்த பொலிஸார், கொலை செய்த கணவனைக் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு