உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

ராஜபக்ஷக்களின் அச்சத்தினாலேயே மர்மமான மரணங்கள் நிகழ்கின்றன – பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவிப்பு!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
124 பார்வைகள்

“எதிர்க்கட்சியின் பல உறுப்பினர்கள் தற்போது பிணையில் வெளியே இருக்கின்றார்கள். அவர்கள் வெகுவிரைவில் சிறைக்குச் செல்வார்கள். இவ்வாறான நிலையில், இன்னும் எத்தனை பேர் தற்கொலை செய்துகொள்ளப் போகின்றார்கள் என்பது தெரியவில்லை.”

– இவ்வாறு விவசாயத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“சர்ச்சைக்குரிய வழக்குகள் மற்றும் ஊழல், மோசடிகளுடன் தொடர்புடைய சாட்சிகள் மர்மமான முறையில் உயிரிழந்து வருகின்றமை கவலைக்குரியது.

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கபில சந்திரசேன, எயார் பஸ் கொள்வனவு மோசடி தொடர்பில் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் சத்தியக்கடதாசி ஒன்றின் ஊடாகப் பல தகவல்களை வெளியிட்டிருந்தார்.

அவர், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தங்காலை கால்டன் இல்லத்தில் வைத்து இலஞ்சம் வழங்கியதாகத் தெரிவித்திருந்தார்.

அதன் பின்னர் அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். தற்போது முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவும் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த காலப் படுகொலைகள் மற்றும் ஊழல், மோசடிகள் தொடர்பில் விரிவான விசாரணைகள் இடம்பெறுவதால், அதனுடன் தொடர்புடைய பலர் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

ராஜபக்ஷ குடும்பத்தினர் மீதான அனைத்து வழக்குகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான வழக்குகளில் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்காகவே, ராஜபக்ஷக்கள் மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிக்கின்றார்கள்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு அனைவரும் பூரண ஆதரவு வழங்க வேண்டும்! – தாயகச் செயலணி அழைப்பு

எதிர்வரும் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி, வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச மாநாட்டுக்கு…

30 0 0
இலங்கை செய்திகள்

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 தொழிலாளர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று 27 ஆம் திகதி மாலை 3 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஆர்.…

53 0 0
இலங்கை செய்திகள்

விறகு வெட்டச் சென்ற மூவருக்கு நேர்ந்த துயரம்.!

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை தோட்டத்தில் உள்ள இரு மாணவர்கள் உட்பட மூவர் விறகு வெட்டச் சென்ற போது மின்சார தாக்குதலுக்கு இலக்கான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில்…

39 0 0
இலங்கை செய்திகள்

விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.!

திறப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் ஞானகுளம் பகுதியில் நேற்று புதன்கிழமை (26) வேன் மோதி 66 வயதுடைய சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக…

64 0 0