உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

ஈபிடிபியின் ஆதரவுடன் ஆட்சி அமைத்த சபைகளில் காணப்படும் நிர்வாக திறனின்மைக்கு விரைவில் தீர்வு!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
120 பார்வைகள்

ஈபிடிபி கட்சியின் ஆதரவுடன் இலங்கை தமிழர் கட்சி ஆட்சி அமைத்த சபைகளில் உள்ள நிர்வாகத் திறனின்மை தொடர்பாக விமர்சனங்கள் எழுவது தமக்கு தெரியும் என்றும், அது குறித்து கலந்தாலோசிக்கப்படும் என முன்னைநாள் அமைச்சரும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அண்மையில் யாழில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் பின்வருமாறு கேள்வி எழுப்பினார்.

“உள்ளூராட்சி சபைகளில் இலங்கை தமிழரசு கட்சியானது ஆட்சி அமைப்பதற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியானது நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியிருந்தது.

அந்தவகையில் அவ்வாறான சபைகளின் நிர்வாக திறனின்மை குறித்து மக்கள் தொடர்ச்சியாக பல விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இது குறித்து தாங்கள் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?” என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போது டக்ளஸ் தேவானந்தா இதனை தெரிவித்துள்ளார்.

அது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் தேர்தல் மூலம் பிரதேச சபையின் உறுப்பினர்களை தெரிவு செய்த பின்னர் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை என்றால் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது.

ஆகவே ஒரு முயற்சியாக ஆதரவு வழங்கிப் பார்ப்போம் என்று தான் வழங்கினோம். அப்படித்தான் முதலில் ஆனோல்ட்டுக்கும், மணிவண்ணனுக்கும் ஆதரவு வழங்கினோம். ஆனால் அவர்களாலும் சரியாக செய்ய முடியவில்லை.

இலங்கை தமிழர் கட்சிக்கு ஆதரவளித்த பின்னர் அவர்களாலும் சரியாக செயல்பட முடியவில்லை என  விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட தலைமைகளான சி.வி.கே சிவஞானம் எம்.ஏ.சுமந்திரன் ஆகாயோருடனும் கதைத்து விரைவில் ஒரு முடிவுக்கு வரவிருக்கின்றோம்.

எமக்கு ஆட்சியில் பங்கெடுக்க விருப்பமில்லை. ஊர்காவற்துறையை எடுத்துப் பார்த்தால் எங்களுக்கு தான் பெரும்பான்மை உள்ளது.

ஆனால் நாங்கள் பதவியை விரும்பவில்லை. மத்தியில் கூட்டாட்சி மாநித்தில் சுயாட்சி என்று நாங்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றோம்.

ஆனால் இன்றைய ஆட்சியாளர்களிடம் மக்களது பிரச்சினையை தீர்ப்பதற்கான வழியில்லை. அதனால்தான் ஆட்சியில் பங்கெடுக்காமல் வெளியில் இருந்து கொண்டு சரியானவற்றுக்கு ஆதரவளிப்பதும் பிழையானதை எதிர்ப்பதும் என்று முடிவு செய்துள்ளோம் என்றார்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு அனைவரும் பூரண ஆதரவு வழங்க வேண்டும்! – தாயகச் செயலணி அழைப்பு

எதிர்வரும் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி, வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச மாநாட்டுக்கு…

30 0 0
இலங்கை செய்திகள்

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 தொழிலாளர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று 27 ஆம் திகதி மாலை 3 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஆர்.…

53 0 0
இலங்கை செய்திகள்

விறகு வெட்டச் சென்ற மூவருக்கு நேர்ந்த துயரம்.!

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை தோட்டத்தில் உள்ள இரு மாணவர்கள் உட்பட மூவர் விறகு வெட்டச் சென்ற போது மின்சார தாக்குதலுக்கு இலக்கான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில்…

39 0 0
இலங்கை செய்திகள்

விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.!

திறப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் ஞானகுளம் பகுதியில் நேற்று புதன்கிழமை (26) வேன் மோதி 66 வயதுடைய சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக…

64 0 0