உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

கால்வாயொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
78 பார்வைகள்

ஹோமாகம, கலகாஹேன பகுதியிலுள்ள கால்வாயொன்றில் இருந்து நேற்று வியாழக்கிழமை (16) காலை மீட்கப்பட்ட நபர் ஒருவரின் சடலம் மீதான பிரேத பரிசோதனையில் அவர் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

இவ்வாறு கொடூரமாக கொலை செய்யப்பட்டவர் ஹோமாகம, பிட்டிபன பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் ஆவார்.

இவர் ஆடைத் தொழிற்சாலையொன்றில் நிரந்தர ஊழியராகப் பணிபுரிந்து கொண்டே, பகுதி நேரமாக ஒன்லைன் ஆப் மூலமான வாடகை மோட்டார் சைக்கிள் ஓட்டுநராகவும் கடமையாற்றி வந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
கடந்த 15ஆம் திகதி இரவு 7.00 மணியளவில் வாடகை சவாரி ஒன்றிற்காக நபர் ஒருவரைத் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் செல்வதற்காக இவர் வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

குறித்த கால்வாய்க்கு அருகில் அமைந்துள்ள ஏலக் காணியொன்றினுள் வைத்தே இந்தத் துரதிர்ஷ்டவசமான கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கொலையாளிகள் அந்த நபரைத் தடுத்து நிறுத்திக் கொடூரமாகக் கொலை செய்ததுடன், அவரிடமிருந்த மோட்டார் சைக்கிள், தங்கச் சங்கிலி, கைத்தொலைபேசி மற்றும் பணப்பை ஆகியவற்றைத் திருடிக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.

குற்றம் நடந்ததாகக் கருதப்படும் காணியை சோதனையிட்ட பொலிஸார், அங்கிருந்து உயிரிழந்த நபர் அணிந்திருந்ததாகக் கருதப்படும் ஒரு ஜோடி காலணிகளையும், ஒரு 20 ரூபா பணத்தாளையும் கண்டெடுத்துள்ளனர்.

நீதவான் விசாரணைகளைத் தொடர்ந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், கழுத்துப் பகுதி அறுக்கப்பட்டமையினாலேயே இந்த மரணம் சம்பவித்துள்ளது என திடீர் மரண விசாரணை அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளில் ஹோமாகம பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கணவரின் நண்பரால் தாக்கப்பட்டு மனைவி படுகொ@லை

தனது கணவனின் நண்பரினால் தாக்கப்பட்ட 68 வயதுடைய குடும்பப் பெண் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமானதாக காத்தான்குடி போலீசார் தெரிவித்தனர் மட்டக்களப்பு காத்தான்குடி போலீஸ் பிரிவுக்கு…

36 0 0
இலங்கை செய்திகள்

தையிட்டி விகாரையை அகற்றக் கோரி காணி உரிமையாளர்கள் போராட்டம்!

யாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையினால் சுவீகரிக்கப்பட்ட தமது சொந்தக் காணிகளை மீளக் கையளிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாகவும் இன்று வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

51 0 0
இலங்கை செய்திகள்

இராணிவத்தை – பம்பரகலை ஒடின்டன் வீதியில் வாகன விபத்து

தலவாக்கலை – இராணிவத்தை பிரதான வீதியில், பம்பரகலை ஒடின்டன் பகுதியில் இன்று(27) காலை வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. நாகசேனை பகுதியிலிருந்து பயணித்த பொலிரோ லொறி ஒன்றும், இராணிவத்தை…

46 0 0
இலங்கை செய்திகள்

யாழில் நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு எதிராக சில சக்திகள் செயற்படுகின்றன!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி யாழில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டுக்கு எதிராக சில சக்திகள் இன்னுமொரு போராட்டத்தினை நடத்துவதின் மூலமாக அதனுடைய தார்ப்பரியத்தையும் அதனுடைய ஒரு முன்னேற்றத்தையும்…

48 0 0