உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
14 செவ்வாய்

அஷ்ரப் சதுக்கம் மற்றும் நிந்தவூர் பிரதேச சபை வளாகத்தில் குப்பைகள் கொட்டத் தடை.!

105 பார்வைகள்

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் எம்.எச்.எம். அஷ்ரப் சதுக்கம் மற்றும் நிந்தவூர் பிரதேச சபையைச் சுற்றியுள்ள வளாகங்களில் சிலரால் தொடர்ச்சியாக குப்பைகள் மற்றும் கழிவுப்பொருட்கள் கொட்டப்பட்டு வருவதாக நிந்தவூர் பிரதேசசபை தெரிவித்துள்ளது.

இவ்விடங்களில் குப்பைகள் கொட்ட வேண்டாம் என பலமுறை அறிவுறுத்தப்பட்ட போதிலும், சில தனிநபர்களால் தொடர்ந்து இச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் சுற்றுச்சூழல் கடுமையாக மாசுபடுவதுடன், பொதுச் சுகாதாரத்திற்கும், பிரதேசத்தின் அழகுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருவதாக சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இதனைக் கருத்திற் கொண்டு, இத்தருணத்திலிருந்து மேற்படி பகுதிகளில் எந்தவிதமான குப்பைகளையோ அல்லது கழிவுப்பொருட்களையோ கொட்டுவது முற்றிலும் தடை செய்யப்படுவதாக பிரதேச சபை அறிவித்துள்ளது.

பொதுமக்கள் தங்களது வீட்டு மற்றும் சிறிய அளவிலான கழிவுப்பொருட்களை, பொதுச் சந்தை வளாகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள தினசரி கழிவகற்றல் (Garbage Collection) பெட்டியில் மட்டும் கொட்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சட்டவிரோதமாக குப்பைகள் கொட்டுபவர்களை உடனடியாக இனங்காணும் நோக்கில், குறித்த பகுதிகளில் இரகசிய கண்காணிப்பு கமராக்கள் (CCTV) பொருத்தப்பட்டு, தொடர்ச்சியாக தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.”இந்த உத்தரவையும் மீறி, பொது இடங்களில் குப்பைகள் அல்லது கழிவுப்பொருட்களைக் கொட்டுபவர்கள் அடையாளம் காணப்பட்டால், அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என நிந்தவூர் பிரதேச சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

ஆணையாளருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த மாநகர சபை ஊழியர் சிறையிலடைப்பு.!

கல்முனை மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபைகளின் ஆணையாளர் என்.எம். நெளபீஸுக்குக் கடமை நேரத்தில் உயிர் அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கல்முனை மாநகர சபை ஊழியரை…

68 0 0
அம்பாறை செய்திகள்

திடீரென ஏற்பட்ட பாரிய தீ விபத்து; தேங்காய் நார் தொழிற்சாலை தீக்கிரை.!

அம்பாறை மாநகர சபை எல்லைக்குட்பட்ட நவகம்புர தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தேங்காய் நார் தொழிற்சாலை ஒன்றில் நேற்று திங்கட்கிழமை (13) மாலை திடீரென ஏற்பட்ட பாரிய தீ விபத்தில்…

97 0 0
அம்பாறை செய்திகள்

யால பருவ நெல் கொள்முதல் ஆரம்பம்.!

அம்பாறை மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான யால பருவ நெல் கொள்முதல் நடவடிக்கைகள் இன்று (13) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. அம்பாறை, உஹன பாலம் நெல் களஞ்சியசாலையில் இக்…

115 0 0
அம்பாறை செய்திகள்

சட்டவிரோத துப்பாக்கியுடன் ஒருவர் கைது.!

அம்பாறை புத்தங்கல சரணாலயப் பகுதியில் அமைந்துள்ள அரசாங்கத்துக்குச் சொந்தமான காணி ஒன்றில் சட்டவிரோதமான முறையில் துப்பாக்கியை வைத்திருந்த நபர் அம்பாறை வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

137 0 0