உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

சட்டவிரோத துப்பாக்கியுடன் ஒருவர் கைது.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
195 பார்வைகள்

அம்பாறை புத்தங்கல சரணாலயப் பகுதியில் அமைந்துள்ள அரசாங்கத்துக்குச் சொந்தமான காணி ஒன்றில் சட்டவிரோதமான முறையில் துப்பாக்கியை வைத்திருந்த நபர் அம்பாறை வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காட்டு விலங்குகளை வேட்டையாடும் நோக்கில் குறித்த நபர் சட்டவிரோதத் துப்பாக்கியுடன் நடமாடுவதாக வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கை நேற்று (12) மாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட சட்டவிரோத துப்பாக்கியை மீட்டெடுத்துள்ள அதிகாரிகள் சந்தேக நபரை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (13) ஆஜர்படுத்த உள்ளதாக வனவிலங்குத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அம்பாறை வனவிலங்குத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரிகளின் வழிகாட்டலின் கீழ் வனவிலங்கு கள பாதுகாவலர் ஜி.என். டி சில்வா, வனவிலங்குப் பாதுகாவலர் ஜெயந்தன், வனவிலங்குப் பாதுகாவலர் கே.எம்.எச்.பி. சஞ்சீவ ஆகிய அதிகாரிகளே இந்த சந்தேகநபரைச் சுற்றிவளைத்துக் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும் எனும் நூல் வெளியீடு.!

2000 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றினைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தின் வரலாறு ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்ட “பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும்”எனும் நூல்…

77 0 0
அம்பாறை செய்திகள்

யானையின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன்.!

அம்பாறை – மத்திய முகாம் 03 ஆம் பிரிவைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சோக…

93 0 0
அம்பாறை செய்திகள்

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவிகளுக்கு பா**லியல் தொல்லை; விரிவுரையாளர் கைது.!

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கிவந்த 55 வயதுடைய விரிவுரையாளர்…

81 0 0
அம்பாறை செய்திகள்

ஐஸ் போ*தைப்பொருளுடன் இருவர் கைது.!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள்…

82 0 0