உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

போதை ஓர் சமூகச் சீர்கேடு எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற கவியரங்கு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
33 பார்வைகள்

சாய்ந்தமருது பிரதேச செயலக கலாச்சார பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கவிஞர்கள் கவிபாடும் சிறப்பு கவியரங்கு சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை(07) மாலை இடம்பெற்றது.

கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணை மற்றும் வழிகாட்டலில், ‘வத்ஸர பியவர’ எனும் கலாச்சார வேலைத்திட்டத்தில், சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் கலாச்சார உத்தியோகத்தர் றஸ்மி மூசாவின் நெறிப்படுத்தலில், சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம். றம்ஸான் தலைமையில் இடம்பெற்ற இக்கவியரங்கில் சாய்ந்தமருதில் உள்ள பிரபல சிரேஷ்ட மற்றும் இளம் கவிஞர்கள், கவிதாயினிகள் கவிதை பாடினர்.

‘போதை ஓர் சமூகச் சீர்கேடு’ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இக்கவியரங்கில், யூ.எல். ஆதம்பாவா, எம்.ஏ.சி. சித்தி ஜெஸீனா, ஏ.எச். சுபையில் அஸீஸ், எம்.ஏ.சி.எம். பாயிஸ் கரீம், எம்.ஆர். ஐகிபானு, யூ.எல். நூறுல் ஹுதா, எம்.ஏ.சி. சாஹிர் கரீம், என்.எம். அலிக்கான், எம்.சி. றிஹானா பேகம், எம்.ஐ. நளீம், அஸ்வான் சக்காப் மௌலானா, எம்.ஐ.எம். அஷ்ரப் ஆகியோர் சிறப்பான முறையில் கவிதை பாடியதோடு, இதற்கு கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபரும் ஓய்வுபெற்ற கோட்டக்கல்விப் பணிப்பாளருமான ஏ. பீர்முகமது நடுவராக மத்தியஸ்தம் வகித்து சிறப்பாக வழி நடாத்தினார்.

இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் ரீ.எம். றிம்ஸான், சமுர்த்தி தலைமைப்பீட உத்தியோகத்தர் ஏ.சி.ஏ. நஜீம், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஏ.சி.முஹம்மட், நிர்வாக கிராம உத்தியோகத்தர் எம்.எஸ். நளீர், கலாச்சார உத்தியோகத்தர் ஏ.எல்.எம். தௌபீக், முஸ்லிம் கலாச்சார உத்தியோகத்தர் யூ.எல். முஹம்மட் றிபாஜ், சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலையப் பொறுப்பதிகாரி ஏ.பி. நௌஸாத், பிரதேச கலாச்சார அதிகார சபையின் தலைவர், பிரதித்தலைவர் உட்பட அதன் உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கலைஞர்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் எனப் பலரும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

இறுதியாக கவிபாடிய அனைவரும் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோர விபத்து; பெண் உட்பட இருவர் உயிரிழப்பு.!

காலி, அம்பலன்வத்தை, அனகாரிக தர்மபால மாவத்தையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்ற உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அம்பலன்வத்தையிலிருந்து…

22 0 0
இலங்கை செய்திகள்

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலய தேர்த் திருவிழா.!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலயத்தின் சித்திரத் தேர்த் திருவிழா நேற்று ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

29 0 0
இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

67 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

74 0 0