உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

கிரிக்கெட் இரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த அந்த ஒரு ரசீது!

69 பார்வைகள்

கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி 1983ம் ஆண்டு உலகக் கிணத்தை வென்றது.

இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி இந்தியா உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.

இதற்கிடையே, வெற்றி விழா கொண்டாட்டத்திற்காக லண்டனில் உள்ள கிராஸ்வெனார் உணவகத்தில் பீர், கேம்பெய்ன், சிகரெட் போன்றவற்றை வாங்கியதான ரசீது ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியது.

அந்த ரசீதில் கபில் தேவ் கையெழுத்திட்டுள்ளார்.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாகும் அந்த ரசீது போலியானது என்றும், அதில் போடப்பட்டுள்ள கபில் தேவ் கையெழுத்தும் போலியானது என முன்னாள் கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, கீர்த்தி ஆசாத் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிய 1983ம் ஆண்டு இந்திய அணியின் உலகக் கிண்ண வெற்றிவிழா பில் முற்றிலும் போலியானது.

லண்டனில் உள்ள ‘Grosvenor Hotel’-ல் 764.40 பவுண்டுகளுக்கு நடைபெற்ற விருந்துக்கான ரசீது மற்றும் கபில்தேவின் கையெழுத்து போலியாக உருவாக்கப்பட்டது.

உணவகத்துக்கு நாங்கள் செல்லவே இல்லை.

லார்ட்ஸ் மைதானத்துக்கு அடுத்து உள்ள ‘Westmoreland Hotel’-ல் தான் தங்கியிருந்து வெற்றி விழாவைக் கொண்டாடினோம்.

கபில்தேவின் கையெழுத்தும் இந்த ரசீதில் போலியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளார்.

கீர்த்தி ஆசாத் 1983ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முதல் முறையாக ஒருநாள் உலகக் கிண்ணத்தை வென்றபோது அந்த அணியில் இடம்பெற்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

இலங்கை கிரிக்கெட் அணிக்கு பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானுக்கு எதிரான T20 தொடரில் பங்கேற்பதற்காக அந்தநாட்டை சென்றடைந்த இலங்கை T20 கிரிக்கெட் அணிக்கு இஸ்லாமாபாத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி இஸ்லாமாபாத் வானூர்தி நிலையத்தை…

79 0 0
விளையாட்டுச் செய்திகள்

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேச (ODI) கிரிக்கெட் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட்…

80 0 0
விளையாட்டுச் செய்திகள்

சீன பகிரங்க டென்னிஸ் தொடரில் ஜப்பானின் நயோமி ஒசாகா 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

சீனத் தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற சீன பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில், ஜப்பானின் முன்னணி வீராங்கனையான நயோமி ஒசாகா 4வது சுற்றுக்கு…

89 0 0
விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டு விழா : ஆடவருக்கான கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 124 ஓட்டங்களால் வீழ்த்தியது இந்தியா

ஆசிய விளையாட்டு விழாவின் ஆடவருக்கான கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது காலிறுதிப் போட்டியில், 124 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி,…

74 0 0