உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
10 சனி
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஆசிய விளையாட்டு விழா : ஆடவருக்கான கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 124 ஓட்டங்களால் வீழ்த்தியது இந்தியா

83 பார்வைகள்

ஆசிய விளையாட்டு விழாவின் ஆடவருக்கான கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது காலிறுதிப் போட்டியில், 124 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களை பெற்றது.

இந்திய அணிக்காக இஷான் கிஷன் ஆட்டமிழக்காமல் 46 பந்துகளில் 80 ஓட்டங்களை விளாசினார். வைபவ் சூர்யவன்ஷி 38 ஓட்டங்களைப் பெற்றார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் தரிந்து ரத்நாயக்க மற்றும் சஹான் ஆராச்சிகே ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

169 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 9.5 ஓவர்களில் 45 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன் மூலம் இந்திய அணி 124 ஓட்டங்களால் அபார வெற்றியைப் பதிவு செய்து, ஆசிய விளையாட்டு விழா ஆடவர் கிரிக்கெட் போட்டியில் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

சீன பகிரங்க டென்னிஸ் தொடரில் ரஷ்ய வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா அரையிறுதிக்கு முன்னேற்றம்!

சீனத் தலைநகர் பீஜிங்கில் சீன பகிரங்க டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிச் சுற்றில், ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவா (Mirra Andreeva)…

48 0 0
விளையாட்டுச் செய்திகள்

இலங்கை – பாகிஸ்தான் முதலாவது டி20 போட்டி இன்று ஆரம்பம்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று (09) நடைபெறவுள்ளது. பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடைபெறவுள்ள இந்த போட்டி, உள்ளூர் நேரப்படி…

80 0 0
விளையாட்டுச் செய்திகள்

டெல்லி கப்பிட்டல்ஸ் அணியின் புதிய பயிற்சியாளராக சவுரவ் கங்குலி நியமனம்!

ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணி தலைவர் சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லி அணியின் தலைமைப்…

80 0 0
விளையாட்டுச் செய்திகள்

2036 ஒலிம்பிக் போட்டியை நடத்தப்போவது யார்?

2036ஆம் ஆண்டுக்கான கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான ஆரம்பக்கட்டப் போட்டியில் இந்தியா மற்றும் கட்டார் உள்ளிட்ட 7 நாடுகள் களமிறங்கியுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் குழு உத்தியோகபூர்வமாக…

86 0 0