உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

மன்னார் ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக மாலை நேர தையல் பயிற்சி ஆரம்பம்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
18 பார்வைகள்

மன்னார் ஜீவ ஊற்று அன்பின் கரம் அலுவலகம் ஊடாக மன்னார் பனங்கட்டுக்கொட்டு பகுதியில் பெண்களுக்கான தையல் பயிற்சி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தற்போது இரண்டாவது கட்டமாக மாலை நேர தையல் பயிற்சிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளர் தயாளினி ஜோன் வழிகாட்டுதலில், ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் மதனின் மேற்பார்வையில் குறித்த தையல் பயிற்சிகள் இடம்பெற்று வருகிறது.

காலையில் ஒரு பிரிவினருக்கும், மாலையில் மேலும் ஒரு பிரிவினருக்குமாக இரண்டு பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அமைப்பின் ஸ்தாபகர் பெல்ஜியத்தில் வசித்து வரும் ஜெஜீவனின் வழிகாட்டுதலில் இலங்கையின் பல இடங்களில் தமது மனிதாபிமான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அமைப்பு முல்லைத்தீவை தலைமை அலுவலகமாகவும், கிளைகளை கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் நிறுவி தற்சார்பு பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது.

மன்னாரில் இரண்டாவது பிரிவாக குறித்த தையல் பயிற்சி மாலை நேர வகுப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த தையல் பயிற்சிக்கு அனுசரணையை சுவிட்ஸர்லாந்தைச் சேர்ந்த மங்கையம்மா மற்றும் லண்டனைச் சேர்ந்த பாபு ஆகியோர் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0