உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

குப்பைகளால் நிரம்பியுள்ள கல்முனை கண்ணகி அம்மன் ஆலயத்துக்குரிய காணி; மக்கள் அவதி.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
95 பார்வைகள்

கல்முனை கண்ணகி அம்மன் ஆலயத்துக்குரிய காணி குப்பைகளால் நிரம்பி காணப்படுகின்றது.

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கண்ணகி அம்மன் ஆலயத்துக்குரிய காணியில் போடப்படும் குப்பையினால் வீதியின் இரு மருங்கிலும் குப்பைகள் நிரம்பி வழிகின்றன.

இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் அப்பகுதியால் உடற்பயிற்சிக்காக செல்லும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இது தவிர அருகில் உள்ள கடற்கரை பகுதிக்கும் குறித்த குப்பைகள் காற்றினால் பரவி விழுகின்றன.

மேலும், குறித்த காணியில் கொட்டப்படும் குப்பைகளில் பியர் ரின்கள், பிளாஸ்டிக் கலன்கள் உள்ளிட்ட உக்காத பல்வேறு பொருட்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த காணியில் உள்ள குப்பைகளில் நீர் தேங்குவதனால் டெங்கு போன்ற நோய்களும் பரவும் அபாயம் காணப்படுகிறது.

மேலும், கல்முனை கடற்கரை பள்ளிவாசல் அருகில் இந்த கண்ணகி அம்மன் ஆலயத்துக்குரிய காணி காணப்படுவதுடன் தொடர்ச்சியாக சட்டவிரோத குப்பைகள் தினமும் கொட்டப்பட்டு வருகின்றன.

அத்துடன் இப்பகுதியில் உள்ள நாய்கள், மாடுகள், காகங்கள் குப்பைகளை உண்பதனால் அயலில் உள்ள கிணறுகள், கால்வாய்கள் அசுத்தமடைகின்றன.

இது தொடர்பில் கல்முனை மாநகர சபையினர் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

51 0 0
அம்பாறை செய்திகள்

பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும் எனும் நூல் வெளியீடு.!

2000 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றினைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தின் வரலாறு ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்ட “பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும்”எனும் நூல்…

77 0 0
அம்பாறை செய்திகள்

யானையின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன்.!

அம்பாறை – மத்திய முகாம் 03 ஆம் பிரிவைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சோக…

93 0 0
அம்பாறை செய்திகள்

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவிகளுக்கு பா**லியல் தொல்லை; விரிவுரையாளர் கைது.!

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கிவந்த 55 வயதுடைய விரிவுரையாளர்…

81 0 0