விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலய மாணவர்கள் பாராட்டி கௌரவிப்பு.!
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலய மாணவர்கள் கோட்டமட்ட சிறுவர் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் ஆறு போட்டியில் பங்குபற்றி ஐந்து போட்டிகளில் முதலாம் இடத்தையும் ஒரு போட்டியில் மூன்றாம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அவர்களை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை வளாகத்தில் பாடசாலை சமுகத்தினரின் ஏற்பாட்டில் பாடசாலை அதிபர் தம்பிராசா தவராசா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் பாடசாலை அதிபர், மதகுரு மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி குழுவினர், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


