உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

அம்பாறையில் மீண்டும் எரிபொருள் வரிசை ஆரம்பம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
88 பார்வைகள்

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதை அவதானிக்க முடிகிறது.

குறிப்பாக அம்பாறையில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலும் நேற்று மாலை முதல் இன்று காலை வரை நீண்ட வாகன வரிசை காணப்படுகின்றது.

சில பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மீண்டும் நேற்று இரவு நீண்ட வரிசைகள் காணப்பட்டன.

தற்போது எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் எரிபொருள் நிலைய உரிமையாளர்களே திட்டமிட்டு மீள வாகன வரிசையை ஏற்படுத்தியுள்ளனர் என மக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சிலர் செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி மீண்டும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்கள் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். எனினும் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தேவையான எரிபொருள் தொடர்ச்சியாக எவ்வித தடையும் இன்றி விநியோகிக்கப்படுகிறது.

இது தவிர எரிபொருள் விலை அதிகரிக்கலாம் என்பதற்காக ஒரு சில எரிபொருள் நிலையங்களில் இவ்வாறு வரிசைகள் உருவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

51 0 0
அம்பாறை செய்திகள்

பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும் எனும் நூல் வெளியீடு.!

2000 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றினைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தின் வரலாறு ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்ட “பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும்”எனும் நூல்…

77 0 0
அம்பாறை செய்திகள்

யானையின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன்.!

அம்பாறை – மத்திய முகாம் 03 ஆம் பிரிவைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சோக…

93 0 0
அம்பாறை செய்திகள்

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவிகளுக்கு பா**லியல் தொல்லை; விரிவுரையாளர் கைது.!

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கிவந்த 55 வயதுடைய விரிவுரையாளர்…

81 0 0