உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

“மல்யுத்தத்தில் இருந்து விலக மாட்டேன்” – வினேஷ் போகத் ஆவேசம்!

50 பார்வைகள்

இந்திய மல்யுத்த வீராங்கனை​யான வினேஷ் போகத் ஓய்வு முடிவை திரும்ப பெற்​றுக் கொண்டு வரும் 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்​சல்ஸ் ஒலிம்​பிக்​கில் பங்​கேற்​கும் வகை​யில், மீண்​டும் மல்​யுத்த போட்​டி​யில் களமிறங்க முடிவு செய்​திருந்​தார். இதற்​காக உத்​தரபிரதேச மாநிலம் கோண்டா நகரில் நேற்று முன்​தினம் தொடங்​கிய சீனியர் ரேங்​கிங் தொடரில் 57 கிலோ எடைப்​பிரி​வில் களமிறங்க இருந்​தார்.

இந்த போட்​டி​யில் பங்​கேற்​ப​தற்​காக நேற்று வினேஷ் போகத் சென்​றிருந்​தார். அப்​போது இந்​திய மல்​யுத்த சங்க அதி​காரி​கள் வினேஷ் போகத்தை போட்​டி​யில் பங்​கேற்க அனு​ம​திக்​க​வில்​லை. ஏனெனில் வரும் ஜூன் 26 ஆம் திகதி வரை எந்​தவொரு உள்​நாட்​டுப் போட்​டி​யிலும் பங்​கேற்க வினேஷ் போகத்​துக்கு இந்​திய மல்​யுத்த சங்​கம் தடை விதித்​துள்​ளது.


இதற்கு காரணம் வினேஷ் போகத் ஓய்வு முடிவை திரும்ப​பெற்றது தொடர்​பாக உலக மல்​யுத்த கூட்​டமைப்​புக்​கும், தேசிய ஊக்​கமருந்து எதிர்ப்பு அமைப்​புக்​கும் 6 மாதத்​துக்கு முன்​னரே தகவல் தெரிவிக்​க​வில்லை என குற்​றம்​சாட்​டப்​பட்​டது. மேலும் அவர் மீது ஒழுங்​கு​முறை மீறல் குற்​றச்​சாட்​டும் சுமத்​தப்​பட்​டது. இதொடர்​பாக இந்​திய மல்​யுத்த சங்​கம் வினேஷ் போகத்​திடம் விளக்​கம் கேட்டு 15 பக்க கடிதம் அனுப்பி இருந்​தது.

இதற்கு வினேஷ் போகத் பதில் அளித்​திருந்​தார். ஆனால் பல்​வேறு குற்​றச்​சாட்​டு​களுக்கு வினேஷ் போகத் பதில் அளிக்​க​வில்லை எனவும், அவரது பதில் முழுமை பெறாமல் இருப்​ப​தாக​வும் இந்​திய மல்​யுத்த சங்​கம் தெரி​வித்​துள்​ளது. இதன் காரண​மாகவே வினேஷ் போகத், கோண்டா போட்​டி​யில் கலந்​து​கொள்ள அனு​ம​திக்​கப்​பட​வில்லை என இந்​திய மல்​யுத்த சங்​கம் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.


இதுதொடர்​பாக 31 வயதான வினேஷ் போகத், இந்​திய மல்​யுத்த அதி​காரி​களு​டன் பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். இதன் பின்​னர் வினேஷ் போகத் கூறிய​தாவது: நான் என்ன செய்ய வேண்​டும் என்று நீங்​கள் எதிர்​பார்க்​கிறீர்​கள்? நான் சந்​நி​யாசம் வாங்​கிக்​கொண்டு விளை​யாட்டை விட்டு போய்​விட வேண்​டு​மா? தோல்​வியை ஒப்​புக்​கொள்ள வேண்​டு​மா? அதன் மூலம் எனக்கு எதி​ரான அவர்​களின் சதி வெற்றி பெற வேண்​டு​மா? நான் மல்​யுத்​தத்​தைக் கைவிட வேண்​டும், நான் சோர்​வடைய வேண்​டும், நான் கைகூப்பி வணங்​கி​விட்டு வெளி​யேற வேண்​டும் என்று விரும்​பு​கிறார்​கள்.

இந்​திய மல்​யுத்த சங்​கத்​தின் தற்​போதைய தலை​வர் சஞ்​சய் சிங், முன்​னாள் தலை​வர் பிரிஜ் பூஷண் மற்​றும் அவரது குழு​வினர் என அதி​காரம் மற்​றும் கட்​டுப்​பாட்​டில் இருப்​பவர்​கள் அனை​வரும் இதையே விரும்​பு​கிறார்​கள். போராடு​வதற்கு எனக்கு உரிமை இருக்​கிறது. சஞ்​சய் சிங்கோ அல்​லது எந்​தவொரு சம்மேளனமோ எனக்கு இந்த உரிமை​யைக் கொடுக்​க​வில்​லை.

இந்த நாட்​டின் குடிமகளாக எனது உரிமை என்ன என்​பது எனக்​குத் தெரி​யும். இந்​திய மல்​யுத்த சம்​மேளன நிர்​வாகத்​துக்கு எதி​ராகப் பேசி​யதற்​காகவே நான் தண்​டிக்​கப்​படு​கிறேன். நான் துன்​பங்​களை அனுப​வித்து வரு​கிறேன். ஆனால், அந்​தத் துன்​பங்​களைத் தாங்​கும் சக்​தியை கடவுள் எனக்​குக் கொடுத்​துள்​ளார்.

நான் அதை எதிர்​கொள்​வேன். நான் கடின​மாக உழைக்​கிறேன், அதற்​கான வலிமை​யும் என்​னிடம் உள்​ளது. நான் நேர்மை மற்​றும் உண்​மை​யின் பாதை​யில் நடந்து கொண்​டிருக்​கிறேன்​. அதற்​கான பலனை கடவுள்​ நிச்​ச​யம்​ எனக்​குத்​ தரு​வார்​. இவ்​வாறு அவர்​ கூறினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

இலங்கை கிரிக்கெட் அணிக்கு பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானுக்கு எதிரான T20 தொடரில் பங்கேற்பதற்காக அந்தநாட்டை சென்றடைந்த இலங்கை T20 கிரிக்கெட் அணிக்கு இஸ்லாமாபாத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி இஸ்லாமாபாத் வானூர்தி நிலையத்தை…

79 0 0
விளையாட்டுச் செய்திகள்

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேச (ODI) கிரிக்கெட் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட்…

80 0 0
விளையாட்டுச் செய்திகள்

சீன பகிரங்க டென்னிஸ் தொடரில் ஜப்பானின் நயோமி ஒசாகா 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

சீனத் தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற சீன பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில், ஜப்பானின் முன்னணி வீராங்கனையான நயோமி ஒசாகா 4வது சுற்றுக்கு…

89 0 0
விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டு விழா : ஆடவருக்கான கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 124 ஓட்டங்களால் வீழ்த்தியது இந்தியா

ஆசிய விளையாட்டு விழாவின் ஆடவருக்கான கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது காலிறுதிப் போட்டியில், 124 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி,…

74 0 0