உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஒன்றரை வயது பெண் குழந்தையை விற்க முயன்ற தாய் மற்றும் தந்தை கைது.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
46 பார்வைகள்

கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் ஒன்றரை வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்றை ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முற்பட்ட தாய் மற்றும் தந்தை எனக் கூறப்படும் ஆண் ஒருவரும் அப்பகுதி மக்களால் பிடிக்கப்பட்டு தருமபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவது,
யாழ்ப்பாணம் மாதகல் பகுதியைச் சேர்ந்த குறித்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் அதில் ஒரு குழந்தையை வளர்க்க முடியாத நிலையில் விற்பனை செய்வதாகவும் கூறி உள்ளனர்.

தற்பொழுது விற்பனை செய்யப்பட்ட குழந்தை இவர்களுடையதா? அல்லது வேறு யாருடைய குழந்தையா? என மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக குழந்தையை விற்பனை செய்த தாய் மற்றும் விற்பனை செய்வதற்கு உடந்தையாக இருந்த ஆண் ஒருவரும் மற்றும் குழந்தையை பணம் கொடுத்து பெற்றவர் உட்பட மூன்று பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தை தற்பொழுது பொலிஸாரின் பராமரிப்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சர்வதேச சமாதான அமைப்பின் விசேட விருது; 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவரான இலங்கையர் கௌரவிப்பு.!

சர்வதேச சமாதான அமைப்பினால் உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்ட சிறந்த விருந்தினருக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விசேட நிகழ்வு…

55 0 0
இலங்கை செய்திகள்

எருமை மாடுகளை திருடியவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

எருமை மாடுகளை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகிய இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்மாந்துறை…

66 0 0
இலங்கை செய்திகள்

யாழில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போ*தைப்பொருள் பாவனையாளர்கள்.!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – சகாயபுரம் (J/150) எனும் கிராமத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையாளர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்கு உள்ள காணி ஒன்றில் கூடுகின்ற…

73 0 0
இலங்கை செய்திகள்

மரணப் பொறியிலிருந்து மக்களை மீட்டெடுங்கள்.!

“இந்த அரசு மக்கள் மீது வரிக்கு மேல் வரிகளை விதித்து, வற் வரியை அதிகரித்து, அரச வருமானத்தை அதிகரித்துள்ளது. மக்களை அழிவுக்குள்ளாக்கும் இந்த வரி மரணப் பொறியிலிருந்து…

55 0 0