உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

அடையாளம் தெரியாத சடலம் மீட்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
73 பார்வைகள்

கிளிநொச்சி – குமாரபுரம் பகுதியில் அடையாளம் தெரியாத நிலையில் மர்மமான முறையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குமாரபுரம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட சுட்டத்தீவு கோவில் அருகேயுள்ள வனப்பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதாக நேற்று இரவு பொலிஸாருக்குத் தகவல் கிடைத்த நிலையில், கிளிநொச்சி தலைமைப் பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

அதன்படி, மீட்கப்பட்ட சடலம் மிகவும் சிதைந்த நிலையில் காணப்படுவதால், அவர் யார் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

உயிரிழந்தவருக்குச் சொந்தமான உடைமைகளோ அல்லது குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகத்திற்கிடமான பொருட்களோ சம்பவ இடத்தில் இதுவரை கண்டெடுக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மர்ம மரணம் குறித்து இன்று (19) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர்.

நீதவானின் நேரடிப் பார்வையிடல் மற்றும் உத்தரவைத் தொடர்ந்து, சடலம் பிரேதப் பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்படவுள்ளது.

இது கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்துப் பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சர்வதேச சமாதான அமைப்பின் விசேட விருது; 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவரான இலங்கையர் கௌரவிப்பு.!

சர்வதேச சமாதான அமைப்பினால் உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்ட சிறந்த விருந்தினருக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விசேட நிகழ்வு…

55 0 0
இலங்கை செய்திகள்

எருமை மாடுகளை திருடியவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

எருமை மாடுகளை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகிய இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்மாந்துறை…

66 0 0
இலங்கை செய்திகள்

யாழில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போ*தைப்பொருள் பாவனையாளர்கள்.!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – சகாயபுரம் (J/150) எனும் கிராமத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையாளர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்கு உள்ள காணி ஒன்றில் கூடுகின்ற…

73 0 0
இலங்கை செய்திகள்

மரணப் பொறியிலிருந்து மக்களை மீட்டெடுங்கள்.!

“இந்த அரசு மக்கள் மீது வரிக்கு மேல் வரிகளை விதித்து, வற் வரியை அதிகரித்து, அரச வருமானத்தை அதிகரித்துள்ளது. மக்களை அழிவுக்குள்ளாக்கும் இந்த வரி மரணப் பொறியிலிருந்து…

55 0 0