உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

கிளிநொச்சி ஏ – 9 வீதியில் பாதசாரி கடவையில் ; உயிரிழப்பு..!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
84 பார்வைகள்

கிளிநொச்சி ஏ – 9 பிரதான வீதியில், பாதசாரி கடவையில் வீதியைக் கடக்க முயன்ற நபர் ஒருவர் வாகனம் மோதி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி அதிவேகமாகச் சென்ற வாகனம் ஒன்றே, பாதசாரி கடவையூடாக வீதியைக் கடக்க முயன்ற நபர் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று ஏப்ரல் 14 ஆம் திகதி இடம்பெற்ற இந்த விபத்தில் சிக்கிய 44 வயதுடைய நபர் பலத்த காயமடைந்துள்ளார்.

அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக கிளிநொச்சி போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும், அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய வாகன சாரதியைக் கிளிநொச்சி பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், சாரதியின் கவனக்குறைவு அல்லது அதிவேகமே விபத்துக்குக் காரணமா என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

பாதசாரி கடவைகளில் வாகனங்கள் மிகுந்த அவதானத்துடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையிலும், இவ்வாறான விபத்துக்கள் நேர்வது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சர்வதேச சமாதான அமைப்பின் விசேட விருது; 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவரான இலங்கையர் கௌரவிப்பு.!

சர்வதேச சமாதான அமைப்பினால் உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்ட சிறந்த விருந்தினருக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விசேட நிகழ்வு…

55 0 0
இலங்கை செய்திகள்

எருமை மாடுகளை திருடியவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

எருமை மாடுகளை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகிய இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்மாந்துறை…

66 0 0
இலங்கை செய்திகள்

யாழில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போ*தைப்பொருள் பாவனையாளர்கள்.!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – சகாயபுரம் (J/150) எனும் கிராமத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையாளர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்கு உள்ள காணி ஒன்றில் கூடுகின்ற…

73 0 0
இலங்கை செய்திகள்

மரணப் பொறியிலிருந்து மக்களை மீட்டெடுங்கள்.!

“இந்த அரசு மக்கள் மீது வரிக்கு மேல் வரிகளை விதித்து, வற் வரியை அதிகரித்து, அரச வருமானத்தை அதிகரித்துள்ளது. மக்களை அழிவுக்குள்ளாக்கும் இந்த வரி மரணப் பொறியிலிருந்து…

55 0 0