உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

யுத்தம் நாளைக்கே முடிவுக்கு வந்தாலும் பொருளாதாரப் பாதிப்பு விரைவில் தீராது.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
29 பார்வைகள்

மத்திய கிழக்குப் போர் நாளைக்கே முடிவுக்கு வந்தாலும், எண்ணெய் உற்பத்தி உட்கட்டமைப்புகள் மீது ஏற்பட்டுள்ள பாதிப்புகள் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் ஒரே இரவில் நீங்கிவிடாது என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கொழும்பில் நேற்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.

தற்போதைய நெருக்கடி நிலை தணியும் வரை மின்சாரம் மற்றும் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்குமாறும் அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

எரிபொருள் விலை உயர்வு மற்றும் ஏனைய பொருட்களின் விலை உயர்வால் அதிகம் பாதிக்கப்படும் துறைகளைக் கண்டறிந்து, அவற்றுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கு நிதி அமைச்சு தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

மின்சார விநியோகத்தைத் துண்டிக்கும் எண்ணம் தற்போது அரசுக்கு இல்லை என்று கூறிய அவர், விலைகள் அதிகரித்த போதிலும் மின்சாரம் மற்றும் எரிபொருளைத் தடையின்றி வழங்குவதே அரசின் பிரதான நோக்கம் என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோர விபத்து; பெண் உட்பட இருவர் உயிரிழப்பு.!

காலி, அம்பலன்வத்தை, அனகாரிக தர்மபால மாவத்தையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்ற உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அம்பலன்வத்தையிலிருந்து…

22 0 0
இலங்கை செய்திகள்

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலய தேர்த் திருவிழா.!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலயத்தின் சித்திரத் தேர்த் திருவிழா நேற்று ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

29 0 0
இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

67 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

74 0 0