உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

அமைச்சர் லால் காந்தவுடன் மக்கள் நேரடியாக பேசலாம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
25 பார்வைகள்

விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் மட்டத்தில் பொதுமக்கள் ஏதேனும் விடயங்களை அல்லது கோரிக்கைகளை முன்வைக்க விரும்பினால், தனது தொலைபேசி இலக்கத்துக்கு “குரல் வழிச் செய்தி” ஒன்றை அனுப்புமாறு அமைச்சர் லால் காந்த கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர், பொதுமக்கள் நேரடியாகத் தொடர்பு கொள்வதற்கு ஏதுவாக 071 2473104 என்ற இலக்கத்தை வழங்கியுள்ளார்.

குறித்த விடயங்கள் தொடர்பான தகவல்களை அல்லது முறைப்பாடுகளை இந்த இலக்கத்துக்குக் குரல் வழிச் செய்தியாக அனுப்பி வைக்குமாறும், அதன் மூலம் அமைச்சின் மட்டத்திலான தீர்வுகளை விரைவாகப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான நேரடித் தொடர்பைப் பேணுவதற்கும், அமைச்சின் செயற்பாடுகளைப் வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோர விபத்து; பெண் உட்பட இருவர் உயிரிழப்பு.!

காலி, அம்பலன்வத்தை, அனகாரிக தர்மபால மாவத்தையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்ற உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அம்பலன்வத்தையிலிருந்து…

23 0 0
இலங்கை செய்திகள்

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலய தேர்த் திருவிழா.!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலயத்தின் சித்திரத் தேர்த் திருவிழா நேற்று ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

30 0 0
இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

67 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

74 0 0