ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு.!
மாத்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நூபே ரயில் மார்க்கத்திற்கு அருகில், ரயிலில் மோதி நபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (23) மதியம் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஹாமுவத்த பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
மருதானையிலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த ரயில் மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, காயமடைந்த அவர், மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.