உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
27 பார்வைகள்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை மார்ச் 31 ஆம் திகதி வெளிப்படுத்துவதை தடுக்கும் வகையில் மார்ச் 27 ஆம் திகதி என்னை கைது செய்ய அரசாங்கம் முயற்சிக்கிறது என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை மார்ச் 31 ஆம் திகதி பகிரங்கப்படுத்துவதற்கு உதய கம்மன்பில மார்ச் 27 ஆம் திகதி வெளியில் இருக்க வேண்டும் என்று அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார். அவ்வாறாயின் மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் என்னை கைது செய்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. நான் இதுவரை காலமும் எந்த மோசடி மற்றும் துர்நடத்தைகளிலும் ஈடுபடவில்லை.

அரசுக்கு சொந்தமான ஒரு பேனையை கூட வீட்டுக்கு கொண்டு செல்லவில்லை. ஆகவே முடிந்தால் மார்ச் 27 ஆம் திகதி என்னை கைது செய்யுங்கள் என்று அமைச்சரவை பேச்சாளருக்கு சவால் விடுக்கிறேன்.

இந்த அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை நான் தொடர்ச்சியாக வெளிப்படுத்துகிறேன். என்னை கைது செய்வதற்கு இதுவரையில் 06 முறை முயற்சித்து தோல்வியடைந்த நிலையில் தற்போதும் அரசாங்கம் அதே முயற்சியை தொடர்கிறது. உரிய காரணிகள் ஏதும் இல்லாமல் என்னை கைது செய்வதற்கும் முயற்சிக்கப்படுகிறது.

பிள்ளையான் கைது செய்யப்பட்டு ஒரு வருட காலமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். நீதிமன்றத்துக்கு கூட இதுவரையில் முன்னிலைப்படுத்தப்படவில்லை. தற்போது சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளார். அவரை பார்ப்பதற்கும், அவருக்கு வீட்டில் இருந்து உணவு கொண்டு வந்து கொடுப்பதற்கும் அவரது வீட்டாருக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் 2019 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட இப்ராஹிமிற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ரவி செனவிரத்ன மற்றும் சானி அபேசேகர ஆகியோர் அரச மரியாதையளித்து கவனித்துள்ளார்கள். 2019 ஆம் ஆண்டு ரமழான் பண்டிகையின் போது இப்ராஹிமின் குடும்பத்தாரின் அனுசரணையுடன் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தடுப்புக் காவலில் இருந்த அனைவருக்கும் நட்சத்திர ஹோட்டலில் இருந்து பிரியாணி வழங்கப்பட்டுள்ளது.

சானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோர் எவ்வாறு உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் சம்பவத்துக்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்தார்கள் என்பதை மார்ச் 31 ஆம் திகதி ஆதாரத்துடன் வெளிப்படுத்துவேன். இதனால் தான் அரசாங்கம் தற்போது கலக்கமடைந்து என்மீது பழி சுமத்துகிறது என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோர விபத்து; பெண் உட்பட இருவர் உயிரிழப்பு.!

காலி, அம்பலன்வத்தை, அனகாரிக தர்மபால மாவத்தையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்ற உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அம்பலன்வத்தையிலிருந்து…

23 0 0
இலங்கை செய்திகள்

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலய தேர்த் திருவிழா.!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலயத்தின் சித்திரத் தேர்த் திருவிழா நேற்று ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

30 0 0
இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

67 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

74 0 0