உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

தேசிய தாதியர் பல்கலைக்கழகம்; பிரதமர் தலைமையில் விசேட மீளாய்வு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
26 பார்வைகள்

இலங்கையின் தாதியர் சேவையை பட்டதாரி நிலைக்கு உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு, தேசிய தாதியர் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்று விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், இத்திட்டத்திற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் தற்போதைய செயற்பாடுகள் விரிவாக மீளாய்வு செய்யப்பட்டன.

பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவது என்பது நீண்டகால மற்றும் சிக்கலான ஒரு செயல்முறை என்பதால், அவசரமான தீர்மானங்களைத் தவிர்த்து, உயர்கல்வித் தரநிலைகளுக்கு இணங்க இத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

தற்போது பல்கலைக்கழக கட்டமைப்பில் நிலவும் நெருக்கடிகள் மற்றும் சவால்களைக் கருத்தில் கொண்டு, நடைமுறைச் சாத்தியமான முறையில் இத்திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தாதியர் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்காக அக்குழுவினால் இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்துக் கேட்டறிந்த பிரதமர், குழு உறுப்பினர்கள் முன்வைத்த பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தினார்.

இக்கலந்துரையாடலில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் கே. எல். வசந்தகுமார, அகில இலங்கை தாதியர் சபையின் பிரதிநிதிகள், சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் உயர் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இலங்கைத் தாதியர்களின் தொழில்முறை அந்தஸ்தை சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கச் செய்வதில் இந்தப் பல்கலைக்கழகத் திட்டம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோர விபத்து; பெண் உட்பட இருவர் உயிரிழப்பு.!

காலி, அம்பலன்வத்தை, அனகாரிக தர்மபால மாவத்தையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்ற உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அம்பலன்வத்தையிலிருந்து…

23 0 0
இலங்கை செய்திகள்

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலய தேர்த் திருவிழா.!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலயத்தின் சித்திரத் தேர்த் திருவிழா நேற்று ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

30 0 0
இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

67 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

74 0 0