உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மண்வெட்டியால் தாக்கி குடும்பஸ்தர் கொ*லை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
32 பார்வைகள்

ஹொரணை, போருவதண்ட பகுதியில் உள்ள தங்குமிட அறை ஒன்றில் தங்கியிருந்த இருவருக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிந்துள்ளது.

மண்வெட்டியால் தாக்கப்பட்டதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று ஹொரணை தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் போருவதண்ட, ரத்மல்கொட, தீரானந்த மாவத்தை பகுதியைச் சேர்ந்த லியனகே சோமசிறி (வயது 65) என்பவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் கடந்த ஐந்து மாதங்களாக போருவதண்ட, சல்மல் கந்த பகுதியில் உள்ள அறை ஒன்றில் தற்காலிகமாகத் தங்கியிருந்து வேலை செய்து வந்துள்ளார். அதே அறையில் கடந்த மூன்று மாதங்களாகத் தங்கியிருந்த மற்றுமொரு இளைஞருடன் நேற்றுமுன்தினம் மாலை ஏற்பட்ட தர்க்கம் மோதலாக மாறியுள்ளது. இதன்போது, மேற்படி இளைஞன் அங்கிருந்த மண்வெட்டியால் குடும்பஸ்தரைத் தலை மற்றும் உடலில் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

தாக்குதலில் படுகாயமடைந்த அவர் ஹொரணை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பாக கிரிஎல்ல, அலகாவ பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட மண்வெட்டியையும் பொலிஸார் சான்றுப் பொருளாகக் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஹொரணை தலைமையகப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோர விபத்து; பெண் உட்பட இருவர் உயிரிழப்பு.!

காலி, அம்பலன்வத்தை, அனகாரிக தர்மபால மாவத்தையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்ற உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அம்பலன்வத்தையிலிருந்து…

23 0 0
இலங்கை செய்திகள்

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலய தேர்த் திருவிழா.!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலயத்தின் சித்திரத் தேர்த் திருவிழா நேற்று ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

30 0 0
இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

67 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

74 0 0