உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; ஒருவர் கைது.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
95 பார்வைகள்

கல் ஓயா ஆற்றுப் பகுதியில் செங்கல்வாடி என்ற பெயரில் இயங்கி வந்த பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டு சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை தலைமையக பொலிஸாரின் ஊழல் தடுப்புப் பிரிவினரால் கல் ஓயா பாலத்திற்கு அடியில் பணப்பரிமாற்றம் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது கல் ஓயா ஆற்றுப் பகுதியில் செங்கல் உற்பத்தி நிலையம் (செங்கல் வாடி) என்ற போர்வையில் முன்னெடுக்கப்பட்டு வந்த பாரிய அளவிலான கசிப்பு உற்பத்தி நிலையம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அம்பாறை சேனநாயக்கபுர பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சுமார் 90,000 மில்லிலீற்றர் கோடா மற்றும் கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த நபர் செங்கல் அறுக்கும் பணியில் ஈடுபடுவது போல் நடித்து, அதன் மறைவில் நீண்டகாலமாக கசிப்பு காய்ச்சும் தொழிலை முன்னெடுத்து வந்துள்ளார் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

காய்ச்சப்படும் ஒரு போத்தல் கசிப்பு 1,500 ரூபா வீதம் மூன்று நபர்களுக்கு விற்பனைக்காக வழங்கப்பட்டு வந்துள்ளது. இதற்கான பணப் பரிமாற்றங்கள் இரவு வேளைகளில் கல் ஓயா பாலத்திற்கு அடியில் மிகவும் இரகசியமான முறையில் இடம்பெற்று வந்துள்ளமை பொலிஸாரால் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இவ்விடயம் குறித்து மேலதிக விசாரணைகளை அம்பாறை தலைமையக பொலிஸாரின் ஊழல் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டுள்ளதுடன் கைதான சந்தேக நபர் சட்ட நடவடிக்கைக்காக அம்பாறை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

51 0 0
அம்பாறை செய்திகள்

பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும் எனும் நூல் வெளியீடு.!

2000 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றினைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தின் வரலாறு ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்ட “பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும்”எனும் நூல்…

77 0 0
அம்பாறை செய்திகள்

யானையின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன்.!

அம்பாறை – மத்திய முகாம் 03 ஆம் பிரிவைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சோக…

93 0 0
அம்பாறை செய்திகள்

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவிகளுக்கு பா**லியல் தொல்லை; விரிவுரையாளர் கைது.!

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கிவந்த 55 வயதுடைய விரிவுரையாளர்…

81 0 0