உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
56 பார்வைகள்

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்காடு பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் இருந்து பொலிஸாரால் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்டவர் அக்கரைப்பற்று பகுதியில் பிறந்து கோளாவில் 2 இல் வசித்து வந்த 51 வயதுடைய சாமித்தம்பி திவ்வியராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்று புதன்கிழமை (18) அக்கரைப்பற்று பொலிஸாரினால் மீட்கப்பட்ட குறித்த சடலம் தொடர்பில் குடும்பத்தார் அவரை தேடிவந்த நிலையில் ஊடகங்கள் வாயிலாக அறிந்த உறவினர்கள் சடலத்தை நேரில் சென்று அடையாளம் காட்டினர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் மரண விசாரணை அதிகாரி ஆகியோர் சடலத்தை பார்வையிட்டனர்.

தொடர்ந்து தடயவியல் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் நல்லடக்கத்திற்காக நேற்று புதன்கிழமை (18) ஒப்படைக்கப்பட்டது.

மேலும் ஒரு மாதத்திற்கு முன்னர் உயிரிழந்தவரின் மனைவி மரணடைமடைந்த நிலையில் அவர் உறவினர்களது வீட்டில் தங்கி வாழ்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும் எனும் நூல் வெளியீடு.!

2000 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றினைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தின் வரலாறு ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்ட “பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும்”எனும் நூல்…

77 0 0
அம்பாறை செய்திகள்

யானையின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன்.!

அம்பாறை – மத்திய முகாம் 03 ஆம் பிரிவைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சோக…

93 0 0
அம்பாறை செய்திகள்

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவிகளுக்கு பா**லியல் தொல்லை; விரிவுரையாளர் கைது.!

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கிவந்த 55 வயதுடைய விரிவுரையாளர்…

81 0 0
அம்பாறை செய்திகள்

ஐஸ் போ*தைப்பொருளுடன் இருவர் கைது.!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள்…

84 0 0