பெரியகோமரசங்குளம் மகா வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு விழா.!
வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியகோமரசங்குளம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வு இன்று (16) சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப. சத்தியலிங்கம் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.
மேலும் சிறப்பு விருந்தினர்களாக வவுனியா தெற்கு வலய பிரதிக்கல்வி பணிப்பாளர் போல் அமல்ராஜ், வலய உடற்கல்வி உதவி கல்வி பணிப்பாளர் வி. விமலன் ஆகியோருடன் அயற்பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் போது அணிநடை அணிவகுப்பு உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன.