உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

வைத்தியர்களுக்கு இனி தடையின்றி எரிபொருள்! சுகாதார பிரதி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
37 பார்வைகள்

வைத்தியர்களின் தேவைக்கு ஏற்ப எதிர்காலத்தில் எரிபொருளை விநியோகிக்க எதிர்பார்ப்பதாக சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.சேவைத் தேவையின் அடிப்படையில் வழங்கப்படும் எரிபொருள் அளவைக் குறிப்பிடும் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“QR குறியீட்டை அறிமுகப்படுத்தும் போது, பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்கள் மற்றும் சில தொழில்நுட்பப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.இன்னும் ஒரு சில நாட்களுக்கு இந்த சிக்கல்கள் இருக்கும், பின்னர் அவை தீர்க்கப்படும்.

நாம் இதனை ஒரு பொதுவான சுற்றறிக்கையாகவே அறிமுகப்படுத்தியுள்ளோம். விசேடமான தொழில் பிரிவுகள் மற்றும் விசேட அபிவிருத்தி திட்டங்களில் ஈடுபடும் வாகனங்கள் உள்ளன.அவை தொடர்பான தனித்தனியான வழிகாட்டல்கள் மற்றும் சுற்றறிக்கைகள் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் வெளியிடப்படும்.

வைத்தியர்கள் என்பவர் ஒரு விசேட தொழிலைச் சேர்ந்தவர்கள். அத்துடன் விசேட அபிவிருத்தி திட்டங்களும் உள்ளன. எனவே, ஒரு நபருக்கோ அல்லது ஒரு வாகனத்திற்கோ வழங்கப்படும் எரிபொருள் அளவு ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் இருக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கவில்லை.

அவற்றின் விசேட தன்மையை இனங்கண்டு, அதற்கான சுற்றறிக்கைகள் அறிமுகப்படுத்தப்படும் போது, வைத்தியர்களின் தேவைகளை உணர்ந்து அதற்குரிய சுற்றறிக்கைகள் எதிர்காலத்தில் வெளியிடப்படும்.” என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கணவரின் நண்பரால் தாக்கப்பட்டு மனைவி படுகொ@லை

தனது கணவனின் நண்பரினால் தாக்கப்பட்ட 68 வயதுடைய குடும்பப் பெண் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமானதாக காத்தான்குடி போலீசார் தெரிவித்தனர் மட்டக்களப்பு காத்தான்குடி போலீஸ் பிரிவுக்கு…

36 0 0
இலங்கை செய்திகள்

தையிட்டி விகாரையை அகற்றக் கோரி காணி உரிமையாளர்கள் போராட்டம்!

யாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையினால் சுவீகரிக்கப்பட்ட தமது சொந்தக் காணிகளை மீளக் கையளிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாகவும் இன்று வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

51 0 0
இலங்கை செய்திகள்

இராணிவத்தை – பம்பரகலை ஒடின்டன் வீதியில் வாகன விபத்து

தலவாக்கலை – இராணிவத்தை பிரதான வீதியில், பம்பரகலை ஒடின்டன் பகுதியில் இன்று(27) காலை வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. நாகசேனை பகுதியிலிருந்து பயணித்த பொலிரோ லொறி ஒன்றும், இராணிவத்தை…

46 0 0
இலங்கை செய்திகள்

யாழில் நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு எதிராக சில சக்திகள் செயற்படுகின்றன!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி யாழில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டுக்கு எதிராக சில சக்திகள் இன்னுமொரு போராட்டத்தினை நடத்துவதின் மூலமாக அதனுடைய தார்ப்பரியத்தையும் அதனுடைய ஒரு முன்னேற்றத்தையும்…

48 0 0