மாணவர்களுக்கு நவீன சிகை அலங்காரம் தடை – சம்மாந்துறை பிரதேச சபை அறிவிப்பு.!
சம்மாந்துறை பிரதேச சபை, வலயக் கல்வி அலுவலகம், நம்பிக்கையாளர் சபை மற்றும் சமூக சேவைகள் அமைப்புகளுடன் இணைந்து மேற்கொண்ட தீர்மானத்தின்படி, பாடசாலை மாணவர்களுக்கு நவீன முறையில் சிகை அலங்காரம் செய்வதைத் தடை செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 20 வயதிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு நவீன முறையில் சிகை அலங்காரம் செய்யாமல் இருக்குமாறு சம்மாந்துறை பிரதேச சபை சிகை அலங்கரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், இந்த அறிவுறுத்தலை மீறும் சிகை அலங்கரிப்பாளர்களின் கடை உரிமப் பத்திரம் இரத்து செய்யப்படுவதுடன், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சம்மாந்துறை பிரதேச சபை தகவல் மையம் தெரிவித்துள்ளது.