உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

அரச ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்வது குறித்து இறுதி முடிவு இல்லை – அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவிப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
24 பார்வைகள்

அரசு ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை அமுல்படுத்துவது தொடர்பாக அரசு இதுவரை எந்தவொரு இறுதி தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.


நாட்டில் நிலவும் தற்போதைய அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த விளக்கம் வழங்கப்பட்டதாக அவர் ஊடகங்களிடம் குறிப்பிட்டார்.தற்போதைய நிலையில் அரச ஊழியர்கள் தங்களின் அன்றாட பணிகளை வீட்டிலிருந்தே மேற்கொள்ளும் வாய்ப்புகள் குறித்து அரசு கவனம் செலுத்தி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

எனினும், இதுகுறித்து இன்னும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அரச நிறுவனங்களின் தினசரி பணிகள் தடையின்றி மற்றும் வினைத்திறனுடன் முன்னெடுக்கப்படுவது குறித்து துறைசார் அதிகாரிகளுடன்தொடர்ந்து கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.


மேலும், இந்த விடயம் தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்பட்டவுடன் அது குறித்து பொதுமக்களுக்கும் அரச ஊழியர்களுக்கும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.போக்குவரத்துக்கான எரிபொருள் சவாலை கருத்தில் கொண்டு இத்தகைய நடைமுறையை அரசு பரிசீலித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கணவரின் நண்பரால் தாக்கப்பட்டு மனைவி படுகொ@லை

தனது கணவனின் நண்பரினால் தாக்கப்பட்ட 68 வயதுடைய குடும்பப் பெண் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமானதாக காத்தான்குடி போலீசார் தெரிவித்தனர் மட்டக்களப்பு காத்தான்குடி போலீஸ் பிரிவுக்கு…

36 0 0
இலங்கை செய்திகள்

தையிட்டி விகாரையை அகற்றக் கோரி காணி உரிமையாளர்கள் போராட்டம்!

யாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையினால் சுவீகரிக்கப்பட்ட தமது சொந்தக் காணிகளை மீளக் கையளிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாகவும் இன்று வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

51 0 0
இலங்கை செய்திகள்

இராணிவத்தை – பம்பரகலை ஒடின்டன் வீதியில் வாகன விபத்து

தலவாக்கலை – இராணிவத்தை பிரதான வீதியில், பம்பரகலை ஒடின்டன் பகுதியில் இன்று(27) காலை வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. நாகசேனை பகுதியிலிருந்து பயணித்த பொலிரோ லொறி ஒன்றும், இராணிவத்தை…

46 0 0
இலங்கை செய்திகள்

யாழில் நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு எதிராக சில சக்திகள் செயற்படுகின்றன!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி யாழில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டுக்கு எதிராக சில சக்திகள் இன்னுமொரு போராட்டத்தினை நடத்துவதின் மூலமாக அதனுடைய தார்ப்பரியத்தையும் அதனுடைய ஒரு முன்னேற்றத்தையும்…

48 0 0