உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமத் திட்டம் காரைதீவில் ஆரம்பம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
28 பார்வைகள்

“தூய இலங்கை” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய உற்பத்தித்திறன் செயலகம் முன்னெடுத்து வரும் சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமத் திட்டத்தின் ஒரு பகுதியாக, காரைதீவு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மாளிகைக்காடு மேற்கு கிராமத்தை சமூக உற்பத்தித்திறன் கிராமமாக அபிவிருத்தி செய்யும் ஆரம்ப நிகழ்வு இன்று (16) நடைபெற்றது.


காரைதீவு பிரதேச செயலாளர் எந்திரி ஜி. அருணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், உற்பத்தித்திறன் மூலம் நாட்டை அபிவிருத்தி நோக்கில் முன்னேற்றும் வேலைத்திட்டம் தொடர்பான விளக்கங்கள் காணொளி வடிவில் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்டன. மேலும் சமூக உற்பத்தித்திறன் தொடர்பான விளக்க உரையையும் பிரதேச செயலாளர் நிகழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து உற்பத்தித்திறன் தொடர்பான விழிப்புணர்வு காணொளியும் காண்பிக்கப்பட்டதுடன், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கரையோரப் பிரதேசங்களின் அபிவிருத்திக் குழுத் தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவாவின் பிரத்யேக செயலாளர் எஸ். இம்தியாஸ் கலந்து கொண்டார்.

மேலும், “தூய இலங்கை” திட்டத்தின் காரைதீவு பிரதேச ஒருங்கிணைப்பாளர், காரைதீவு பிரதேச சபையின் பதில் தவிசாளர், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் பர்ஹான், உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கணவரின் நண்பரால் தாக்கப்பட்டு மனைவி படுகொ@லை

தனது கணவனின் நண்பரினால் தாக்கப்பட்ட 68 வயதுடைய குடும்பப் பெண் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமானதாக காத்தான்குடி போலீசார் தெரிவித்தனர் மட்டக்களப்பு காத்தான்குடி போலீஸ் பிரிவுக்கு…

36 0 0
இலங்கை செய்திகள்

தையிட்டி விகாரையை அகற்றக் கோரி காணி உரிமையாளர்கள் போராட்டம்!

யாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையினால் சுவீகரிக்கப்பட்ட தமது சொந்தக் காணிகளை மீளக் கையளிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாகவும் இன்று வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

51 0 0
இலங்கை செய்திகள்

இராணிவத்தை – பம்பரகலை ஒடின்டன் வீதியில் வாகன விபத்து

தலவாக்கலை – இராணிவத்தை பிரதான வீதியில், பம்பரகலை ஒடின்டன் பகுதியில் இன்று(27) காலை வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. நாகசேனை பகுதியிலிருந்து பயணித்த பொலிரோ லொறி ஒன்றும், இராணிவத்தை…

46 0 0
இலங்கை செய்திகள்

யாழில் நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு எதிராக சில சக்திகள் செயற்படுகின்றன!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி யாழில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டுக்கு எதிராக சில சக்திகள் இன்னுமொரு போராட்டத்தினை நடத்துவதின் மூலமாக அதனுடைய தார்ப்பரியத்தையும் அதனுடைய ஒரு முன்னேற்றத்தையும்…

48 0 0