உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

தமிழர் பிரச்சினை பற்றி ஜனாதிபதி – மனோ எம்.பி. அடுத்த வாரம் நேரில் பேச்சு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
30 பார்வைகள்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பிக்கும் இடையில் இன்று விசேட தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி தனது அழைப்புகளுக்குப் பதிலளிப்பதில்லை என மனோ கணேசன் பகிரங்கமாகக் குற்றச்சாட்டு முன்வைத்திருந்த நிலையில், இன்று இந்த உரையாடல் நிகழ்ந்துள்ளமை அரசியல் வட்டாரங்களில் கவனிப்பைப் பெற்றுள்ளது.

“ஜனாதிபதி அநுர தற்போது எனது தொலைபேசி அழைப்புகளுக்குப் பதிலளிப்பதில்லை” என்று மனோ கணேசன் கொழும்பில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போது பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்தே, இன்று ஜனாதிபதி தரப்பிலிருந்து இந்தத் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தொலைபேசி உரையாடலின் போது, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அவசர பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாட வேண்டியதன் அவசியத்தை மனோ கணேசன் வலியுறுத்தினார். அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தூதுக்குழுவை அடுத்த வாரம் நேரில் சந்தித்து உரையாட அழைப்பு விடுத்துள்ளார்.

மலையகத் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் தற்போதைய வாழ்வாதார மற்றும் அரசியல் சார் பிரச்சினைகள் குறித்து இச்சந்திப்பின் போது விரிவாக ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கணவரின் நண்பரால் தாக்கப்பட்டு மனைவி படுகொ@லை

தனது கணவனின் நண்பரினால் தாக்கப்பட்ட 68 வயதுடைய குடும்பப் பெண் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமானதாக காத்தான்குடி போலீசார் தெரிவித்தனர் மட்டக்களப்பு காத்தான்குடி போலீஸ் பிரிவுக்கு…

36 0 0
இலங்கை செய்திகள்

தையிட்டி விகாரையை அகற்றக் கோரி காணி உரிமையாளர்கள் போராட்டம்!

யாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையினால் சுவீகரிக்கப்பட்ட தமது சொந்தக் காணிகளை மீளக் கையளிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாகவும் இன்று வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

51 0 0
இலங்கை செய்திகள்

இராணிவத்தை – பம்பரகலை ஒடின்டன் வீதியில் வாகன விபத்து

தலவாக்கலை – இராணிவத்தை பிரதான வீதியில், பம்பரகலை ஒடின்டன் பகுதியில் இன்று(27) காலை வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. நாகசேனை பகுதியிலிருந்து பயணித்த பொலிரோ லொறி ஒன்றும், இராணிவத்தை…

46 0 0
இலங்கை செய்திகள்

யாழில் நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு எதிராக சில சக்திகள் செயற்படுகின்றன!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி யாழில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டுக்கு எதிராக சில சக்திகள் இன்னுமொரு போராட்டத்தினை நடத்துவதின் மூலமாக அதனுடைய தார்ப்பரியத்தையும் அதனுடைய ஒரு முன்னேற்றத்தையும்…

48 0 0