QR நடைமுறை காரணமாக முச்சக்கரவண்டி சாரதிகள் அவதி.!
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து முச்சக்கரவண்டி சாரதிகள் கூறுகையில்,
இன்று முதல் அமுலில் வரும் QR நடைமுறை காரணமாக வாராந்தம் வழங்கப்படும் 15 லீற்றர் எமக்கு போதுமானது அல்ல. வாராந்தம் எமக்கு குறைந்தபட்சம் 30 லீற்றர் எரிபொருள் வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
தனியார் பேருந்துகள் ஹட்டன் அரச பேருந்து நிலையத்தில் அவற்றிற்கான எரிபொருளை நிரப்பிக் கொள்ள வேண்டும் என கூறப்படுகிறது. தனியார் வாடகை வேன்களுக்கு 40 லீற்றர் எரிபொருள் போதுமான அளவு இல்லை என்று தனியார் வேன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். வாராந்தம் 80 லீற்றர் எரிபொருள் தேவை என்று கூறுகின்றனர்.
நாங்கள் அன்றாட வாழ்வில் வாகனங்களை வாடகைக்கு விட்டு அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து உணவு, வீட்டு வாடகை மற்றும் பாடசாலை செலவு, மருத்துவ செலவு, வாகன செலவு போன்றவற்றை நடாத்த வேண்டும். வழங்கப்படும் 40 லீற்றர் எரிபொருள் எமக்கு போதுமானது இல்லை என்று தெரிவித்தார். முச்சக்கர வண்டி சாரதிகள் இது போன்றே கூறுகின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

