உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

போதைப்பொருள் வேட்டை; வெளிநாட்டு கடத்தல் கும்பலின் முக்கிய உதவியாளர் சிக்கினார்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
29 பார்வைகள்

வெளிநாட்டிலிருந்து இயக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய உதவியாளர் ஒருவர், சுமார் 25 இலட்சம் ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் பணத்துடன் இன்று ஞாயிற்றுக்கிழமை பலப்பிட்டியவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அஹுங்கல்ல பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, சந்தேகநபரின் இல்லம் இன்று அதிகாலை சுற்றிவளைக்கப்பட்டது.

இதன்போது முன்னெடுக்கப்பட்ட தேடுதலில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 261 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் சந்தைப் பெறுமதி சுமார் 25 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

போதைப்பொருள் விற்பனை மூலம் ஈட்டப்பட்டதாகக் கருதப்படும் ஒரு இலட்சத்து ஐந்தாயிரம் ரூபா ரொக்கப் பணமும் இதன்போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், வெளிநாட்டிலிருந்து போதைப்பொருள் கடத்தலை வழிநடத்தும் நபர் ஒருவரின் பிரதான உதவியாளர் என்பது ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக அஹுங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொடர்ச்சியான ஏமாற்றுதல்களால் இலங்கை முற்றாக ஸ்தம்பித்துள்ளது : சஜித் குற்றச்சாட்டு!

தொடர்ச்சியாக இரண்டு சந்தர்ப்பங்களில் இந்நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, 2019ஆம் ஆண்டில் ஏமாந்து நாடு வங்குரோத்தடைந்தது போல், 2024 இலும்…

48 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு அனைவரும் பூரண ஆதரவு வழங்க வேண்டும்! – தாயகச் செயலணி அழைப்பு

எதிர்வரும் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி, வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச மாநாட்டுக்கு…

48 0 0
இலங்கை செய்திகள்

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 தொழிலாளர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று 27 ஆம் திகதி மாலை 3 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஆர்.…

55 0 0
இலங்கை செய்திகள்

விறகு வெட்டச் சென்ற மூவருக்கு நேர்ந்த துயரம்.!

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை தோட்டத்தில் உள்ள இரு மாணவர்கள் உட்பட மூவர் விறகு வெட்டச் சென்ற போது மின்சார தாக்குதலுக்கு இலக்கான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில்…

40 0 0