‘தவ்ரது ரமழான்’ மாணவர்களுக்கான ரமழான் கால செயலமர்வின் பரிசளிப்பு நிகழ்வு.!
புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு, கல்முனை ஹூதா ஜூம்ஆ பள்ளிவாசல் தஃவா குழுவின் ஏற்பாட்டில், ஹுதா அழைப்பு வழிகாட்டல் பணியகம் நடாத்திய “தவ்ரது ரமழான்” மாணவர்களுக்கான ரமழான் கால செயலமர்வின் பரிசளிப்பு நிகழ்வு கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது.
பள்ளிவாசல் பேஷ் இமாம் மெளலவி ஜே.எம்.சாபித் (ஷரயி,ரியாதி) அவர்களின் வழிநடாத்தலில், பள்ளிவாசல் நிர்வாக தலைவர் அல்-ஹாஜ் ஏ.எம். இப்றாஹீம் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்விற்கு விசேட அதிதியாக கலாநிதி, அஷ்ஷெய்க் எம்.எம்.எம்.பஷீர் (மக்கி) அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மற்றும் தஃவா குழுவினர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இந்த நிகழ்வில் உலமாக்களான
முஹம்மட் ஷாமில் (ஹாமி), முஹம்மட் நப்ரிஸ் (ஸரயி), முஹம்மட் ரிப்னாஸ் (ஹாமி), முஹம்மட் நுஸ்கி (ஹாமி), முஹம்மட் இல்ஹாம் (ஹாமி) ஆகியோர் மாணவர்களுக்கு கற்பித்தமைக்காக பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
10 நாட்கள் கொண்ட ரமழான் செயலமர்வில் 65 மாணவர்கள் கலந்துகொண்டு அகீதா, பிக்ஃஹ், ஸீரா, அஹ்லாக், தஜ்வீத், பிக்ஃஹுஸ் ஸலா போன்ற பாடங்களை கற்று பரீட்சை நடத்தப்பட்டதில் வெற்றியாளர்களாக தெரிவானோருக்கு, முதலாம் பரிசாக ரூபாய் 10000.00 உம், இரண்டாம் பரிசாக ரூபாய் 8000.00 உம், மூன்றாம் பரிசாக ரூபாய் 6000.00 உம் இரு பகுதிகளாகவும் ஆறுதல் பரிசில்கள் ரூபாய் 2000.00 வீதம் 04 மாணவர்களுக்கும் வழங்கி கொளரவிக்கப்பட்டனர்.
அத்துடன் இவ் இலவச வகுப்பில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பள்ளிவாசல் தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட நிர்வாகிகள், உலமாக்கள், தஃவா குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.







