உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

எரிவாயு வழங்க முடியாத ஜனாதிபதி பதவி எதற்கு?

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
27 பார்வைகள்

நாட்டின் தற்போதைய எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடியைத் தீர்ப்பதற்கு அரசிடம் முறையான திட்டங்கள் ஏதுமில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.

அரசு வெறும் பேச்சளவிலேயே காலத்தைக் கடத்தி வருகின்றது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

கொழும்பில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
“அதிகாரத்தைக் கைப்பற்றும் போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ள அரசு, தற்போது ஒரு கப்பல் எரிபொருளைக் கூட கொள்வனவு செய்ய முடியாத கையாலாகாத நிலையில் உள்ளது. உலக நாடுகள் வலுசக்தி நெருக்கடியைச் சமாளிக்கப் பல்வேறு திட்டங்களை வகுத்து வரும் நிலையில், இந்த அரசாங்கம் மட்டும் எண்ணெய் இல்லை, நிலக்கரி இல்லை எனக் கூறித் தப்பிக்கப் பார்க்கிறது.

அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னர் நாட்டை சொர்க்கபுரியாக மாற்றுவோம் என்றும், எரிபொருளைச் சேகரித்து இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வோம் என்றும் கூறினார்கள். ஆனால், இன்று ஒரு கப்பலுக்குத் தேவையான எரிபொருளைக் கூட இவர்களால் நிரப்ப முடியவில்லை.

டொலர் தட்டுப்பாடு என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால், இதே வாதத்தைக் கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்திலும் முன்வைத்தார்கள். ரணில் விக்ரமசிங்க அல்லது மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இவ்வாறானதொரு கையாலாகாத நிலையை மக்கள் பார்த்ததில்லை.

தற்போது தனியார் எரிபொருள் நிறுவனங்கள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தியுள்ளன. எரிபொருள் விலை அதிகரிக்கும் என அவர்கள் பதுக்கி வைக்கின்றனர். அரசே ஒரு கறுப்புச் சந்தைக்காரனைப் போலச் செயற்படுவதால், இந்த நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாமல் போயுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் பொய்களை மக்கள் இப்போது புரிந்து கொண்டுள்ளனர். படித்தவர்கள், புத்திஜீவிகள் என்று கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த இவர்களால் எதனையும் செய்ய முடியாது என்பது தெளிவாகியுள்ளது. தற்போது எரிவாயு தட்டுப்பாடு ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. கொழும்பு போன்ற நகர்ப்புற மக்கள் ஒருவேளை உணவைச் சமைக்கக் கூட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மக்களுக்கு ஒருவேளை உணவைச் சமைக்கத் தேவையான எரிவாயுவை வழங்க முடியாவிட்டால், எதற்காக இந்த ஜனாதிபதி பதவி? நீங்கள் முழுமையாகத் தோல்வியடைந்துவிட்டீர்கள்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொடர்ச்சியான ஏமாற்றுதல்களால் இலங்கை முற்றாக ஸ்தம்பித்துள்ளது : சஜித் குற்றச்சாட்டு!

தொடர்ச்சியாக இரண்டு சந்தர்ப்பங்களில் இந்நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, 2019ஆம் ஆண்டில் ஏமாந்து நாடு வங்குரோத்தடைந்தது போல், 2024 இலும்…

48 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு அனைவரும் பூரண ஆதரவு வழங்க வேண்டும்! – தாயகச் செயலணி அழைப்பு

எதிர்வரும் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி, வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச மாநாட்டுக்கு…

48 0 0
இலங்கை செய்திகள்

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 தொழிலாளர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று 27 ஆம் திகதி மாலை 3 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஆர்.…

55 0 0
இலங்கை செய்திகள்

விறகு வெட்டச் சென்ற மூவருக்கு நேர்ந்த துயரம்.!

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை தோட்டத்தில் உள்ள இரு மாணவர்கள் உட்பட மூவர் விறகு வெட்டச் சென்ற போது மின்சார தாக்குதலுக்கு இலக்கான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில்…

40 0 0